YouTurn

2023ல் பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பும் வலதுசாரிகள்!

2023ல் பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பும் வலதுசாரிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜு நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

சென்னை கிழக்கு நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.


X link

விரிவான விளக்கம்

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜு நேற்று மாலை தாக்கப்பட்டதாக ‘Megh Updates’ என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதனை வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 



உண்மை என்ன? 

பரவக் கூடிய சிசிடிவி வீடியோவில் ’31.07.2023’ என்கிற தேதி இருப்பதை காண முடிகிறது. அந்த வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடினோம். இதே வீடியோ 2023, ஆகஸ்ட் 1ம் தேதி சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி!’ என்கிற தலைப்பில் ‘Lokal App’ என்ற தளத்தில் செய்தியாக வெளியாகியுள்ளது. 

அதில், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்துப் பேசிவிட்டு, தனது உணவகத்திற்குள் மது அருந்துகிறார் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. அந்த வீடியோவை பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷ் என்பவர் திட்டமிட்டு வெளியிட்டதாகக் கூறி அவரை சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக விகடன், சன் நியூஸ், தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக சுப்பையா, முத்தரசன் மற்றும் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது பரவும் வீடியோ குறித்துக் காவல் துறையும் விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

விகடன் வெளியிட்ட செய்தியில், ”கடையை வாடகைக்கு எடுத்து அதைத் தனது பா.ஜ.க அலுவலகமாக மாற்றிய சுப்பையா, இரவு நேரங்களில் தன்னுடைய நண்பர்கள், ஆதரவாளர்களை வரவழைத்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடை உரிமையாளருக்கும் சுப்பையாவிற்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்சனை இருந்து வந்தது. இந்தச் சூழலில் சுப்பையாவின் பழைய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன” என நங்கநல்லூர் பகுதி பாஜக-வினர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாடகையும் தராமல், கடையில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதினால், இது பற்றி சுப்பையாவிடம் கடை உரிமையாளர் கேட்டுள்ளார். அதற்கு  ‘உயிரோடு இருக்க முடியாது’ எனக் கடை உரிமையாளரை சுப்பையா மிரட்டியதாக விகடன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றிலிருந்து பரவக் கூடிய இந்த வீடியோ 2023ம் ஆண்டு பாஜக நிர்வாகிகளுக்குள் நடந்த பிரச்சனை என்பது தெளிவாகிறது. இதனைத் தேர்தல் சமயத்தில் பாஜக நிர்வாகி, யாரோ ஒரு நபரால் தாக்கப்பட்டது போன்று தவறாகப் பரப்பப்படுகிறது. 

முடிவு : 

சென்னையில் பாஜக நிர்வாகி நேற்றைய தினம் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது 2023ம் ஆண்டு பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க