YouTurn

பிரதமர் மோடியின் பல்லடம் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோக்கள் !

பிரதமர் மோடியின் பல்லடம் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோக்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: காலி சேர்களுடன் மோடி பேசிக் கொண்டிருக்கும் அரியவகை காட்சி.. கண்டுகளியுங்கள்..

X Link | Archive Link

பரவிய செய்தி 2: ஒரு பக்கம் பேசிக்கிட்டு இருக்கான் இவனுங்க சரக்க ஊத்து மாமேனு ஊத்திட்டு இருக்கானுங்க..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

மிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரையின் நிறைவு விழா நேற்று (பிப்ரவரி 27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, இருக்கைகள் அனைத்தும் காலியாக இருப்பதைப் பாருங்கள். பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



இதே போன்று, பிரதமர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது பாஜக தொண்டர்கள் வெளியே மது அருந்திக்கொண்டிருப்பதைப் பாருங்கள் என்று கூறி மற்றொரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோக்களின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இரண்டு வீடியோக்களும் திருப்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசிக்கொண்டிருப்பதாகப் பரவும் வீடியோவின் முழுவீடியோ குறித்து தேடியதில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் (Narendra Modi) 2024 ஜனவரி 2 அன்று "திருச்சிராப்பள்ளி இந்தியாவின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.


மேலும் நேற்று திருப்பூரில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் திறந்தவெளிப் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. ஆனால் காலி இருக்கைகளுடன் இருக்கும் பரவி வரும் வீடியோவில், இருக்கைகள் மேற்கூரைகளுக்கு கீழே அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பரவி வரும் முதல் வீடியோ பிரதமர் திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த முடிகிறது.




இதே போன்று, பாஜகவின் திருப்பூர் கூட்டத்தில் தொண்டர்கள் மது அருந்துவதாகப் பரவும் மற்றொரு வீடியோ கடந்த 2021ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது. இந்த வீடியோ குறித்து உத்தரபிரதேசம் மாநில காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் "மது+ உபி+ யோகி = மோசமானவர். நரேந்திர மோடி அவர்களே வலி நிவாரணி விநியோகிக்கப்படுகிறதா? அப்படிதான் போல. எல்லாம் சரியாகத் தான் இருக்கிறதா?" என்று குறிப்பிட்டு கடந்த 2021 டிசம்பர் 20 அன்று வெளியிடப்பட்டிருந்தது. 



மேலும் இதே போன்று, TEN NEWS INDIA என்ற யூடியூப் பக்கத்திலும் கடந்த 2021 டிசம்பர் 22 அன்று இதே வீடியோ, ஹரித்வாரில் ஜேபி நட்டாவின் பேரணியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று இளைஞர் காங்கிரஸால் குற்றம் சாட்டப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. 



இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான தெளிவாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் இந்த வீடியோ கடந்த 2021ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதால், நேற்று திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தின் போது இது எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: யாரும் இல்லாத இடத்தை பார்த்து மோடி கையசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

மேலும் படிக்க: பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து ஸ்நோர்கெலிங் செய்வதாகப் பரவும் தவறான செய்திகள் !

முடிவு :

நம் தேடலில், காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசிக்கொண்டிருப்பதாகவும், பாஜக கூட்டத்தில் தொண்டர்கள் மது அருந்துவதாகவும் பரவும் இரண்டு வீடியோக்கள், நேற்று நடைபெற்ற திருப்பூர் பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க