YouTurn

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த பழைய வீடியோவை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை...

தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்...

#4000கோடி_என்னாச்சு

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

ரூ.4000ம் கோடி செலவு செய்தும் மழை நீர் தேங்கி வருகிறது என்று பலரும் தி.மு.க அரசை விமர்சித்து வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை… தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்… #4000கோடி_என்னாச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவின் உண்மை தன்மையை குறித்து அறிய எங்கள் ஆய்வை தொடங்கினோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தபோது, JJ Sujith I.N.D.I.A என்ற எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 29, 2020 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை நிர்வாகிகள் தங்கள் வீட்டுக்கு ஒதுக்கிக் கொண்டதால் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. 


எனவே இது 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதற்கும் 2021ல் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசுக்கும் தொடர்பில்லை. 


இதை மேலும் இந்த வீடியோ குறித்து தொடர்ந்து தேடினோம். அப்போது RAM என்ற யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 29, 2020 அன்று இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் திருவல்லிக்கேணியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோ  2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த போது எடுக்கப்பட்டதாகும். இந்த பழைய வீடியோவை தற்போது திமுக ஆட்சியில் நடந்தது போல் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க