YouTurn

'எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி' எனப் பரவும் பழைய வீடியோ!

'எம்பி திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி' எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட இந்த நிலையில்.. ஆகஸ்ட் 17 எழுச்சித்தமிழர் திருமாவளவனுக்கு பூப்புனித நீராட்டு விழா அவசியமா? 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தூய்மைப் பணியாளா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.


இந்நிலையில், நீதிபதிகள், போராட்டம் என்ற பெயரில் நடைபாதையை மறைத்து யாரும் போராடக் கூடாது. அதேநேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உழைப்போா் உரிமை இயக்கம் அனுமதி கோரினால் அதை சட்டப்படி பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த போலீஸாா் யாரையும் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


இதனையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள், இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டு, அவர் குறித்து விமர்சனம் செய்து பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பதிவு செய்து வருகின்றனர். 


#Sanitaryworkersprotest #SanitaryWorkers #SanitationWorkerProtest

pic.twitter.com/q0mWLDqg1m

— 4ம் பாண்டிய பேரரசு மன்னன் RamkumarPeriyasamy Nadar (@pramk2) August 14, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய, வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 


“Velicham TV” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதி கடந்த 2024 ஆகஸ்ட் 16 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. வீடியோவில் சரியாக 05:59:00 மணி நேரத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள பகுதி இடம் பெற்றுள்ளது. 



இந்நிலையில் கடந்த 2024-ல் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில்,  தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று பரவும் வீடியோ, கடந்த 2024-ல் அவருடைய பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க