யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது, சாதி மற்றும் மத ரீதியாகப் பேசக் கூடாது எனப் பல விதிமுறைகள் அதில் அடங்கும்.
[video width="718" height="1280" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/04/GCef8hmnNVQXdGYEAEIWJw695cdkbmdjAAAF.mp4"][/video]
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக வீடியோ ஒன்று நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் திமுக-வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர் மற்றும் பணம் கொடுக்கப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ‘Amos Kurup’ என்ற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அதனைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தைக் கண்டறிந்தோம்.
அந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜனவரி, 2ம் தேதி இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவில் ’Thomas Alva Edison’ என்கிற பெயரும் ‘New Year’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில், அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிழக்கு ஒன்றியத்தின் திமுக செயலாளராக உள்ளார்.
அவர் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக வீடியோ பரவியதையடுத்து அது குறித்து விளக்கமளித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ”நான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். இது முற்றிலும் தவறான செய்தி. ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு அன்று என்னைச் சந்திக்க வரும் வேளாங்கண்ணி மக்களுக்கும் கட்சியினருக்கும் காலண்டர் மற்றும் இனிப்பு வழங்கி எனது புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பேன். சுமார் 15 ஆண்டுகளாக இப்படிச் செய்து வருகிறேன். தற்போது பரவி வரும் தவறான செய்தி குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
புத்தாண்டுக்குப் பணமும் காலண்டரும் கொடுத்த வீடியோவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு :
திமுக கட்சியைச் சேர்ந்தவர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காகப் பணம் கொடுக்கிறார் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கடந்த புத்தாண்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ.