யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட பல தலைவர்கள் சமீபத்தில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த மாநாடில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய ரஷ்ய அதிபர் புதின் எனக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
It was Russian President Vladimir Putin's decision to travel together with Prime Minister Narendra Modi and Putin waited for Modi for 10 minutes.📍Tianjin, China ! pic.twitter.com/O4ESSBFVSB
நம் இந்தியப் பாரத பிரதமர் திரு மோடி ஜியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய ரஷ்யா அதிபர் திரு புடின்... pic.twitter.com/Hsr7l7n30X
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘Bloomberg News’ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ, கடந்த 2024-லேயே “இந்தியப் பிரதமர் மாஸ்கோ பயணத்தை முடித்தவுடன், புதினும் மோடியும் கட்டி அணைத்துக்கொள்கின்றனர்“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் தேடியதில், பிரதமரின் மாஸ்கோ பயணம் குறித்து கடந்த 2024 ஜூலையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Held productive discussions with President Putin at the Kremlin today. Our talks covered ways to diversify India-Russia cooperation in sectors such as trade, commerce, security, agriculture, technology and innovation. We attach great importance to boosting connectivity and… pic.twitter.com/JfiidtNYa8
இதே போன்று, “Reuters” ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2024-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "ரஷ்ய இராணுவத்தின் சேவையில் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய குடிமக்களை விடுவிப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது, இந்த பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ இது என்பது உறுதியாகிறது. இந்த பழைய வீடியோவை தற்போது சீனாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பிரதமர் மோடியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய ரஷ்ய அதிபர் புதின் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.