யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“பரவி வரும் சம்பவம் கடந்த 2017-ல் எடுக்கப்பட்டது. அப்போதே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என சஹாரன்பூர் காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி "வாஹித்" என்ற நபர் இறந்தார். காவல்துறையினருக்கு ஒரு வீடியோ கிடைத்தபோது கலவரம் தொடங்கியது. போது, அந்த வழியாகச் சென்ற ஒரு சிறுவனின் கேமராவில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது.
விரிவான விளக்கம்
இந்தியாவில் பிரபலமான யாத்திரைகளில் ஒன்றான கன்வார் யாத்திரை, இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்த யாத்திரையில் தில்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற கன்வார் யாத்திரையின் போது, சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி "வாஹித்" என்ற இஸ்லாமிய நபர் இறந்தார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த ஆட்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள்.
நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி "வாஹித்" என்ற நபர் இறந்தார். காவல்துறையினருக்கு ஒரு வீடியோ கிடைத்தபோது கலவரம் தொடங்கியது. கன்வார் யாத்ராவை வீடியோ 1/1.... pic.twitter.com/M3p74GAx5e
நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி "வாஹித்" என்ற நபர் இறந்தார். காவல்துறையினருக்கு ஒரு வீடியோ கிடைத்தபோது கலவரம் தொடங்கியது. கன்வார் யாத்ராவை வீடியோ எடுத்துபோது வழியாகச் சென்ற ஒரு சிறுவனின் கேமராவில் இந்த வீடியோ pic.twitter.com/tqdIsV4wRb
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2017-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
“Livehindustan” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோக் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2017 ஜூலை 18 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “சிவ பக்தர்களை ஏற்றிச் சென்ற ஒரு மினி லாரி காவல் நிலையத்தின் அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு இளைஞன் திடீரென லாரியின் பின் சக்கரத்தின் கீழ் விழுந்து கிடந்தான். லாரியின் சக்கரம் அவர் மீது ஏறிச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தியோபந்தில் உள்ள மொஹல்லா லஹஸ்வாடாவைச் சேர்ந்த ஷாஹித்தின் மகன் வாஹித் என அடையாளம் காணப்பட்டார். பின்னர் இவர் வேண்டுமென்றே தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை வீடியோ மூலம் கண்டுபிடிக்க முடிந்தது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“பரவி வரும் சம்பவம் கடந்த 2017-ல் எடுக்கப்பட்டது. அப்போதே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என சஹாரன்பூர் காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.
▶️कतिपय सोशल मीडिया के माध्यम से यह असत्य खबर फैलायी जा रही है कि “थाना देवबंद में सुबह कावड़ियों के ट्रक के नीचे एक मुस्लिम ने आत्महत्या कर ली है"।
#UPPolice pic.twitter.com/4pyCg4CYQL
⏹️ सहारनपुर पुलिस इस असत्य एवं भ्रामक खबर का खंडन करती है।
.@UPPViralCheck @News18UP
இதன் மூலம் கன்வார் யாத்திரையின் போது, சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி "வாஹித்" என்ற நபர் விழுந்து தற்கொலை செய்து கொண்டது உண்மையே. ஆனால் இதற்கும் தற்போது நடைபெற்ற கன்வார் யாத்திரைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது. பரவி வரும் வீடியோ கடந்த 2017-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.
முடிவு:
நம் தேடலில், ‘2025 கன்வார் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ’ எனப் பரவும் வீடியோ, கடந்த 2017-ல் நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புடையது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.