YouTurn

'மும்பை தாஜ் கேட்வே அருகில் கொந்தளிக்கும் அரபிக்கடல்' எனப் பரவும் பழைய வீடியோ!

'மும்பை தாஜ் கேட்வே அருகில் கொந்தளிக்கும் அரபிக்கடல்' எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021ஆம் ஆண்டு ‘Tauktae’ புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மும்பை தாஜ் கேட்வே அருகில் கொந்தளிக்கும் அரபிக்கடல்


Facebook Link: 

விரிவான விளக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 


இந்நிலையில் மும்பை தாஜ் கேட்வே அருகில் கனமழை காரணமாக அரபிக்கடல்நீர் கொந்தளிப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


@theglobalexhibition2894” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த 2021-லேயே மும்பையில் மழை என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.



இதே போன்று “Ashish Singh” என்ற யூடியூப் பக்கத்திலும், கடந்த 2021 மே 18 அன்று மும்பையின் கேட்வேயில் வெள்ளம் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. 



மேலும் “ABC News“ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவின் மூலமும், கடந்த 2021ஆம் ஆண்டு ‘Tauktae’ புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது மும்பையில் ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 



முடிவு:

 

நம் தேடலில், கடந்த 2021-ல் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல்நீர் புகுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க