யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்தில் மது அருந்துவதாகக் குறிப்பிட்டு ‘குமுதம் நியூஸ்‘ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல. கடந்த 2022 மார்ச் மாதம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதை தற்போது ‘குமுதம் நியூஸ்‘ செய்தியாக வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பேருந்துக்குள் கும்பலாக நின்று பள்ளி மாணவிகள் மது குடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் என்று குழுதம் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்துக்குள் வச்சி மாணவிகள் மது அருந்தும் காட்சிகள்!💔
இப்படி இளைய தலைமுறை வரைக்கும் நாசம் பண்ணி வச்சிருக்கீங்களே டா.. பள்ளிக் குழந்தைகளுக்கு எப்படி மது பாட்டில் கிடைக்குது? கஞ்சா கிடைக்குது? பள்ளி குழந்தைகள் வரைக்கும் சீரழிச்சிட்டிங்களேடா @arivalayam 🤬 pic.twitter.com/eXIlEhKw9Z
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது சத்யம் ஊடகத்தில், “பள்ளி மாணவிகள் பேருந்துக்குள் செய்த அதிர்ச்சி காட்சி” என்ற தலைப்பில் மார்ச் 23, 2022 அன்று பரவி வரும் வீடியோவை வைத்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் சில மாணவ - மாணவிகள் ஓடும் பேருந்தில் மது அருந்திக் கொண்டு, அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது, APN live ஊடகத்தில் மார்ச் 24, 2022 அன்று ”Tamil Nadu: Video showing school kids drinking beer goes viral, investigation underway” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படத்துடன் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்தில் மது அருந்துவதாகக் குறிப்பிட்டு ‘குமுதம் நியூஸ்‘ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல. கடந்த 2022 மார்ச் மாதம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதை தற்போது ‘குமுதம் நியூஸ்‘ செய்தியாக வெளியிட்டுள்ளது.
