யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025ஆம் ஆண்டு காவிரி நீர் தமிழ்நாட்டின் மடைகளை வந்தடைந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
கர்நாடகா ஆணையில் நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்த காவிரி நீர்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விடுமாறு ’காவிரி நீர் ஒழுங்காற்று குழு’ கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் இந்த உத்தரவை மதிக்காமல் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்து வந்தது. இது தொடர்பாக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் பின்னர் கர்நாடகாவில் காவிரி விவகாரம் கொந்தளிப்பாக இருப்பதாகச் சொல்லி இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மடைகளுக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை மக்கள் பூஜை செய்து வரவேற்பது போன்ற வீடியோவை தவெக கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.
நீரின் அருமை தெரிந்த உயிர்கள் 💧
காவேரி தாய்க்காக காத்திருக்கிறோம் 😍🥰❤️ pic.twitter.com/oRy26JNIPZ
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Kumbakonam Page’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிலே இந்த வீடியோ 2025ஆம் ஆண்டு காவிரியில் நீர் வந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ‘Gingee Traveller’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோவும் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேற்குறிப்பிட்ட இந்த வீடியோக்கள் கடந்த ஜூன் மாதமே சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால், செய்திகளின் படி கடந்த ஜூலை இறுதி வரையில் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை என்பது தெரியவருகிறது.
கடந்த 31-ம் தேதி மாலை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலும், காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலத்தின் வயநாட்டிலும் கனமழை பெய்தது. இதனால் கபினி அணையின் நீர்மட்டம் வேகவாக உயர்ந்து வருவதால் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டது. முதலில் 500 கனஅடியாக திறந்துவிடப்பட்ட நீர் பின்னர் படிப்படியாக 5000 கனஅடியாகவும் பின்னர் 25,000 கனஅடியாகவும் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் ஆகஸ்ட் 3ஆம் தேதி தான் தமிழ்நாட்டை சென்றடையும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தவெகவினரால் பரப்பப்படும் மேற்கூறிய வீடியோக்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதியே காவிரி நீர் தமிழ்நாடு வந்துவிட்டதாக தவறாக கூறுகிறது.

முடிவு:
2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது காவிரி நீர் தமிழ்நாட்டை வந்தடைந்த போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.