YouTurn

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்று அறிவித்தார். அதன்படி டிசம்பர் 19, 2025 அன்று 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரவிய செய்தி

தமிழ் நாட்டில் முதல் முறையாக தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல் அமைச்சர் தளபதி விஜய் 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது தினமணி ஊடகத்தில் நவம்பர் 15, 2025 அன்று “சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள்: மு.க. ஸ்டாலின்” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடியப் போது, தினத்தந்தி ஊடகத்தில், “சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம்” என்ற தலைப்பில் டிசம்பர் 19, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து ETV Bharat ஊடகத்தில், இது குறித்து மார்ச் 09, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் OMR சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு அருந்தும் அறை, ஓய்வு அறை அமைக்க கட்டுமான பணி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வு அறை பணியை, தவெக ஆட்சியில் ஏற்படுத்தி தரப்பட்டதாக தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க