YouTurn

லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

போர் இன்னும் தொடங்கல... லாகூர் விமான நிலையத்துல போர் விமானத்தில் ஏவுகணைய பொருத்தியபோது பேட்டரி வெடிச்சி பயங்கர விபத்தாம்..! 14 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்தனர் .!



Link / Archive Link 


லாகூர் ஏர்போர்ட்டில் தீ...பாகிஸ்தானில் உள்ள லாகூர் இன்டர்நேசனல் ஏர்போர்ட் தீப் பிடித்து எரிகிறது..

போரை ஆரம்பிக்கும் முன்பே.. விதி விளையாட ஆரம்பித்து விட்டது.



Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த செய்வது, அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடியது, விசாகளை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகள் போருக்கான அறைகூவலாகவே பார்க்கப்படும் என்றும் இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இது இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூழ வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக இருக்கும் வீடியோ காட்சியை பதிவிட்டு, ’போர் தொடக்கும் முன்பே, பாகிஸ்தான் இராணுவம் லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணையை பொருத்தியபோது பேட்டரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் 14 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியானதாகவும்’ பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகின்றனர்.  




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ’Tweak Pakistan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. மே 9 2024 அன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோவின் அடிக்குறிப்பில், ’லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும்,  ’WION News’ யூட்யூப் பக்கத்தில் இது குறித்து செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 2024 மே 9 அன்று பதிவேற்றப்பட்டுள்ள இந்த செய்தி, லாகூர் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.


image.png


மேலும் தேடியதில், ’money control’ செய்தித்தளத்தில் இது குறித்து செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘2024 மே 9ஆம் தேதியன்று அதிகாலை 5 மணி அளவில் லாகூர் நகரத்தில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை’ என்பதும் தெரியவருகிறது.


image.png


இதிலிருந்து, இந்த வீடியோ ஓராண்டிற்கும் முன்னால் லாகூர் விமான நிலையத்தில்  short circuit காரணமாக  ஏற்பட்ட  தீ விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. மேலும், போர் விமானத்தில் ஏவுகணைகளை பொதுவாக இராணுவத் தளத்தில் தான் மேற்கொள்வார்கள், பொதுமக்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் விமான நிலையத்தில் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


முடிவு:


கடந்த 2024 மே 9ஆம் தேதியன்று லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தற்போது லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணையை பொருத்தியபோது விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க