YouTurn

பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி.. பரவும் பழைய வீடியோ!

பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி.. பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவில் இருப்பது திமுக நிர்வாகி அல்ல, அதிமுக நிர்வாகி பொன்னம்பலம். கடந்த ஆண்டு 2025 ஜனவரியில் நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பொன்னம்பலத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

இரவு கோழி வேலை பார்க்க வந்த கீரிப்பிள்ளையை வீட்டிற்குள் பூட்டி வைத்து, விளக்குமாறால் அடித்த இளம்பெண்கள். இவன் திமுக நிர்வாகி என்பதும் கூடுதல் தகவல்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகியின் செயல் என்று கூறி மூன்று நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் வீட்டில் அத்துமீறி நுழைந்த ஒரு நபரை சுற்றி மூன்று இளம்பெண்கள் துடைப்பத்தால் அடிப்பதையும், அந்த நபருடன் சண்டையிடுவதையும் தெளிவாகக் காண முடிகிறது. 


#DMKfails pic.twitter.com/af2yVXorcR

— மிஸ்டர் கமாண்டர் (@UFTVcommanders) April 24, 2026


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “One India“ ஊடகத்தின் இணையதளப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.  



கடந்த 2025 ஜனவரி 30 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், “சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் வேறு வீட்டுக்கு வாடகைக்கு சென்ற நிலையிலும் போனில் அழைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள், பொன்னம்பலத்தை துடைப்பத்தால் அடித்து வெளுத்துள்ளனர்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம், பரவி வரும் வீடியோவில் இருப்பது திமுக நிர்வாகி அல்ல, அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் என்பதை அறிய முடிகிறது. மேலும் கடந்த ஆண்டு 2025 ஜனவரியில் நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பொன்னம்பலத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு: 


நம் தேடலில், “பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகியின் செயல்” எனப் பரவும் வீடியோவில் இருப்பவர், அதிமுகவைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பது தெளிவாகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க