YouTurn

ஜெர்மனியில் முதலமைச்சர் இன்பச் சுற்றுலா செல்வதாக பரவும் பழைய வீடியோ!

ஜெர்மனியில் முதலமைச்சர் இன்பச் சுற்றுலா செல்வதாக பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் புகழ்பெற்ற “ஃபேர்மாண்ட் சான் பிரான்சிஸ்கோ (Fairmont San Francisco)” என்ற இடத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை, ஜெர்மனி சென்றுள்ள அவருடைய தற்போதைய பயணத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

வெளிநாடு பரிதாபங்கள்

ஜெர்மனியில் ஜோடியாக முதலீடுகளை ஈர்க்கும் லட்சணத்தை பாருங்கள் மக்களே

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு சென்ற முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்தித்தார். 

இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர், அங்கு தனது மனைவியுடன் இன்ப சுற்றுலா செல்வதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் முதலமைச்சர் பின் இருக்கும் சிலை குறித்து முதலில் தேடினோம். Tripadvisor. Com என்ற இணையதளப்பக்கத்தில் அந்த சிலை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது காணமுடிந்தது. அதில் Statue of Tony Bennett என்றும், Fairmont San Francisco எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து Fairmont San Francisco என்ற இடத்தை குறித்து தேடி பார்க்கும் போது, இது அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற இடம் என்பது தெரியவந்தது. 

image.png


இது குறித்து ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Asianet News Tamil ஊடகத்தில், ”அமெரிக்காவில் Tony Bennett சிலை முன்பு ஸ்டாலின் உற்சாக போஸ்.!” என்ற தலைப்பில் செப்டம்பர் 3, 2024 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும், நோக்கியா, பேபால் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png

மேலும் அதில் முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தின் ஓய்வு நேரத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்தாகவும்,  அப்போது சான்பிரான்சிஸ்கோவில் Tony Bennett சிலை முன்பு தனியாகவும், தனது மனைவியோடும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் புகழ்பெற்ற “ஃபேர்மாண்ட் சான் பிரான்சிஸ்கோ (Fairmont San Francisco)” என்ற இடத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை, ஜெர்மனி சென்றுள்ள அவருடைய தற்போதைய பயணத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க