யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஆண்டு புனேவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ‘மும்பையில் வெள்ளம்’ என்று குறிப்பிட்டு தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மும்பையில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் ஒரு நபர் வெள்ளத்தில் ஜாலியாக நீந்தி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ஜூன் 8, 2024 அன்று ND TV ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் வீடியோவுடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் புனேவில் பெய்த கனமழையால் தேங்கிய தண்ணீரில் சர்ஃபிங் செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
Video: Pune Man Surfs On Waterlogged Roads, Leaves Internet In Disbelief https://t.co/sSaAxyjSGk pic.twitter.com/u7w3VaKMp2
அதே போல் ஜூன் 8,2024 அன்று APB NADU வெளியிட்ட செய்தியில், புனேவில் பெய்த கனமழையால் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், அப்போது ஒரு சிறுவன் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் நீந்துவதைக் காணலாம் எனவும், சாலையில் செல்லும் வாகனங்களில் அமர்ந்திருப்பவர்களும் இந்தச் சிறுவனை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் India Times ஊடகத்தில், ”Viral video: Pune man's unusual surfing on flooded streets leaves internet in splits” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியுள்ளதையும் பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், கடந்த ஆண்டு புனேவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ‘மும்பையில் வெள்ளம்’ என்று குறிப்பிட்டு தற்போது தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.
