YouTurn

தமிழ்நாட்டில் இரண்டு சிறுமிகள் தாக்கப்பட்டதாகப் பரவும் ஆந்திராவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ!

தமிழ்நாட்டில் இரண்டு சிறுமிகள் தாக்கப்பட்டதாகப் பரவும் ஆந்திராவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அந்த சிறு குழந்தைகளை அடிக்கின்றார், tnpoliceoffl அவருக்கு பாத்ரூம் ட்ரீட்மென்ட் கிடைக்குமா என்று பாருங்கள்.

விரிவான விளக்கம்

பள்ளி சீருடையில் உள்ள இரண்டு மாணவிகளை ஒருவர் மிகக் கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்றும் இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இச்சம்பவம் தொடர்பாகப் புகைப்படத்துடன் ‘Abp live telugu’ இணையதளத்தில் 2022, செப்டம்பர் 15ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உள்ள அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில் இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.



ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளிகூடம் (Tadepalligudem) என்னும் பகுதிக்கு அருகில் வசித்து வந்த கஞ்சி டேவிட் ராஜு (Ganji David Raju) என்பவரது மனைவி நிர்மலா துபாயில் பணி செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

மதுவிற்கு அடிமையான டேவிட் ராஜு துபாயில் உள்ள தனது மனைவியைத் திரும்ப வர வைப்பதற்காக, தனது குழந்தைகளை அடித்து சித்திரவதை செய்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து பெண்டபாடு (Pentapadu) காவல் துறையினர் டேவிட் ராஜுவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த குழந்தைகளையும் மீட்டுள்ளனர். 

மேற்கு கோதாவரி காவல் துறையும் இச்சம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 2022ம் ஆண்டே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.



இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், 2023 ஏப்ரல் மாதம் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. துபாயிலிருந்து ஊர் திரும்பிய நிர்மலா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிறகு சிறையிலிருந்த டேவிட் ராஜுவை பிணையில் எடுத்துள்ளார். 



இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாமென மனைவியை அழைத்துச் சென்ற நிலையில், சில தினங்களில் மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொன்றுவிட்டு டேவிட் ராஜுவும் பூச்சி மருந்து அருந்தி இறந்துள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியில், 2022ம் ஆண்டு டேவிட் ராஜு குழந்தைகளை அடித்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சம்பவத்தைத்தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்தது எனத் தவறாகப் பரப்புகின்றனர். 

முடிவு:

இரண்டு சிறுமிகளை ஒருவர் கடுமையாகத் தாக்குவதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டுடன் தொடர்புடையதல்ல. இது 2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்துள்ளது. அப்போதே அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க