யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். இரண்டு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். POK காஸ்மீரை மீட்க வேண்டிய நேரம் இது.

விரிவான விளக்கம்
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவு வருகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள். இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது” என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
LOC नियंत्रण रेखा पर तत्तापानी सेक्टर में भारत और पाकिस्तान के बीच भारी गोलाबारी। (स्रोत) pic.twitter.com/CUSBCUQW7O
LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள்🔥
இரண்டு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம் 🔥
POK காஸ்மீரை மீட்க வேண்டிய நேரம் இது🇮🇳
அடிக்கிற அடியில இந்தியாவிற்குள் தீவிரவாதம் பேச்சே இருக்க… pic.twitter.com/34yAQ4CmKP
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு “Republic Bharat“ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஜூன் 14 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் போர் நிறுத்தப்பகுதில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று கூறப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
இதன் மூலம் பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2020-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தற்போது தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள் என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் வீடியோ கடந்த 2020-ல் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.