YouTurn

ஜெர்மனியில் சைக்கிளில் இன்ப சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான வீடியோ!

ஜெர்மனியில் சைக்கிளில் இன்ப சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது கடந்த 2024 செப்டம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய வீடியோவை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அவருடைய தற்போதைய பயணத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இன்பச்சுற்றுலா இனிதே ஆரம்பம். இடம்: பெர்லின், ஜெர்மனி.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியைச் சென்றடைந்தார். 


ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு செல்லும் முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள முதல்வர ஸ்டாலின் சைக்கிளில் இன்ப சுற்றுலா செல்வதாகக் கூறி வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Sun News Tamil’ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வரும் இதே வீடியோ, அமெரிக்காவின் சிகாகோவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கடந்த 2024 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 



மேலும் இது குறித்துத் தேடியதில், “தமிழ்நாட்டிற்கான முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா வந்துள்ளார். சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு திட்டத்திற்காக ₹400 கோடி முதலீட்டைப் பெற்றார், இது கிட்டத்தட்ட 500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தித் துறைக்கு மிகவும் முக்கியமானது என்று ஸ்டாலின் விவரித்துள்ளார். தனது பரபரப்பான அட்டவணையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மாலையில் அவர் சைக்கிள் ஓட்டினார்“ என்று குறிப்பிட்டு ‘The Economic Times’ ஊடகப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. 



இதன் மூலம் கடந்த 2024 செப்டம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள அவருடைய தற்போதைய பயணத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், ஜெர்மனியில் சைக்கிளில் இன்ப சுற்றுலா செல்லும் முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் வீடியோ கடந்த ஆண்டு அவர் சிகாகோ சென்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.