YouTurn

முதல்வர் விஜய் பிறந்தநாள் அன்று அரசு பள்ளி வகுப்பறையில் விஜய் பாடல் பாடப்பட்டதா? உண்மை என்ன?

முதல்வர் விஜய் பிறந்தநாள் அன்று அரசு பள்ளி வகுப்பறையில் விஜய் பாடல் பாடப்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

அரசு பள்ளிகள் கல்வி நிலையங்களா அல்லது கலைக்கூத்தாடும் கம்பெனியா?

நடிகனை நாடாள விட்டதின் விளைவு இதுவே 


Link / Archive Link


விரிவான விளக்கம்

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை அரசு பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்கள் பாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இது கடந்த 2026 ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்-ன் பிறந்தநாள் அன்று நடந்த சம்பவம் என்று திமுக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடும்போது, திரைப்பட பாடலாசிரியர் கு.கார்த்திக் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிகிறது. 



இந்த வீடியோ 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதாவது, மாணவர்கள் ‘பீஸ்ட்’ படத்தின் பாடலை பாடும் இந்த வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. 


நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்ட வீடியோவை, தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பள்ளி வகுப்பறைகளில் விஜய் பாடல் பாடப்படுவதாக தவறாக பரப்புகிறார்கள்.



மேலும் தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக தொண்டர்கள் பலர் பள்ளி வகுப்பறையில் மாணவர்களைக் கொண்டு பிறந்தநாள் கோஷம் எழுப்பியது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது உண்மையே. இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பள்ளி ஒன்றில், பல மாணவர்களைக் கொண்டு விஜய் உருவம் போல் நிற்கவைத்த நிகழ்வும் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை அரசியலுக்கு பயன்படுத்துவதாகக் கூறி பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.



இவ்வாறு, பள்ளியில் வகுப்பு நேரங்களில் குறுக்கீடு செய்யும் வகையில் விஜய் பிறந்தநாளை தவெக தொண்டர்கள், பள்ளி நிர்வாகம் செய்த நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால் பரப்பப்படும் இந்த வீடியோ 2 ஆண்டுகள் பழைய வீடியோ தான்.


முடிவு:


நான்கு ஆண்டுகளுக்கு முன்பான வீடியோவை தற்போது முதல்வர் விஜய் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்டதாக திமுகவினர் தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க