யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக வழங்கிய பரிசுத் தொகுப்பு எனப் பரவும் வீடியோ, “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரத்திற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
வித விதமாய் வித்தியாசமாய். இதுக்கு பேர் தான், சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்குறது. புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே, தூண்டிலில மாட்டிக்கிட்டா சோகம் தானே..
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் திமுகவினர் தேர்தலை முன்னிட்டு மொபைல்போன் அடங்கிய பரிசுத்தொகுப்பை மக்களுக்கு கொடுப்பத்தாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்தத் தொகுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படமும், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது. மேலும் அந்த பரிசுத் தொகுப்பில் வாட்ச், குடை, சாம்சங் மொபைல் மற்றும் பணம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
வித விதமாய் வித்தியாசமாய்.
இதுக்கு பேர் தான், சின்ன மீனை போட்டு
பெரிய மீனை புடிக்குறது.
புழுவுக்கு ஆசைப்பட்டு
போகும் மீனே,
தூண்டிலில மாட்டிக்கிட்டா
சோகம் தானே.. pic.twitter.com/VBoEAyU9Qy
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகப் பக்கங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
‘மாலை முரசு’ ஊடகப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2025 ஜூலை 29 அன்று “செல்போன், வாட்ச், ரூ.1,000 பணம்.. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரிசுகள்? | மாலை முரசு செய்திகள்“ என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதே போன்று “The Federal” ஊடகப் பக்கத்திலும், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்டிலேயே பரவி வரும் வீடியோ, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் வாட்ச், குடை, சாம்சங் மொபைல் மற்றும் 5000 ரூபாய் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதன் மூலம் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரத்திற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் வழங்கப்பட்ட பரிசுத்தொகுப்பு இது என்பது உறுதியாகிறது. இந்த பழைய வீடியோவை தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக வழங்கிய பரிசுத் தொகுப்பு எனப் பரவும் வீடியோ, “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரத்திற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.