யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. அப்போதே இந்த போராட்டம் நடத்திய 9 பேர் மீதும் மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பரவிய செய்தி
பெத்த அப்பன் தன் பிள்ளைக்கு பூணல் போடுரான்... பன்றிக்கு பூணூல் போட்டு திக போராட்டம்... இதுக்கு எதுக்குடா பன்றியை கொடுமைபடுத்துறீங்க,அவனுக்கே போட்டு விட்ருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்…

விரிவான விளக்கம்
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் பன்றியுடன் இருக்கும் நபரை காவல்துறை ஒருவர் அழைத்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது One India Tamil ஊடகப்பக்கத்தில், ”பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் - தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 7, 2017 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடி பார்த்த போது, ஆகஸ்ட் 7, 2017 அன்று ”போராட்டம் என்ற பெயரில் பன்றிக் குட்டியை கொன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்” என்ற தலைப்பில் பாலிமர் ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் காவல்துறையினரின் திசையை திருப்பி ராயபேட்டையில் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தினர். அப்போது அவர்கள் பன்றிகளின் வாயைக் கட்டி, தரதரவென இழுத்துவந்ததாகவும், இதை அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் பன்றிக்குட்டிகள் மீட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. மாறாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
முடிவு:
நம் தேடலில், இது 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை திராவிடர் கழகத்தினர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.