YouTurn

வரி ஏய்ப்பு தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன் எனப் பரவும் தவறான வீடியோ!

வரி ஏய்ப்பு தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறன் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தயாநிதிமாறன் பேசியபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

ரஜினிக்கு வரிசலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன்? - தயாநிதி மாறன்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ரூ 15 கோடி வரி ஏய்ப்புக்காக, வருமான வரித் துறை ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்” என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. 


இந்நிலையில், “நடிகர் ரஜினிக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அதே வருமான வரித்துறை, நடிகரை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன்?”  என திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர். மேலும் பரவி வரும் பதிவுகளில் விஜய்க்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், “The Economic Times“ யூடியூப் பக்கத்தில் “'விஜய் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்': வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தயாநிதி மாறன்“ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இது கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பழைய சம்பவம் என்பதை அறிய முடிகிறது. 



கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்பியான தயாநிதிமாறன் “வருமானவரித்துறை மாற்று மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது. நடிகர் ரஜினிக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கிறீர்கள். அதே வருமான வரித்துறை நடிகர் விஜய்யை படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து பாரபட்சமாக நடத்துகிறது” என்றும் பேசியிருந்தார். இதை “BBC News Tamil“ யூடியூப் பக்கத்தில் கடந்த 2020 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்ட செய்தி மூலம் தெளிவாக அறிய முடிகிறது. 



இதன் மூலம், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தயாநிதிமாறன் பேசியபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது. விஜய் அப்போது தவெக கட்சியை ஆரம்பித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


முடிவு: 


நம் தேடலில், “நடிகர் ரஜினிக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அதே வருமான வரித்துறை, நடிகரை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன்?”  என விஜய்க்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியுள்ளார் எனப் பரவும் வீடியோ, கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க