YouTurn

தவெக ஆட்சியின் முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோ!

தவெக ஆட்சியின் முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ, இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் 7, 2026 அன்று 10 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மூலம் உறுதி செய்யமுடிகிறது.

பரவிய செய்தி

பொறுப்பேற்ற முதல் நாளே தரமான சம்பவம் மக்கள் நல் பணி தொடர வாழ்த்துக்கள்.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் Daily Kanchi என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. இதைவைத்து தேடிப் பார்த்த போது, Daily Kanchi என்ற instagram பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் மார்ச் 07, 2026 அன்று பரவி வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில், 87 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை, நீதிமன்ற உத்தரவுப்படி ஆழமான பள்ளம் தோண்டி அதில் கொட்டி காவல்துறையினர் அழித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடியப் போது, Kanchipuram District Police எக்ஸ் பக்கத்தில் மார்க் 07, 2026 அன்று இது குறித்து பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில்  07.03.2026ல்  நீதிமன்ற ,உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 62 வழக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9869.77 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மாகரல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குருவிமலை அரசு வனப்பகுதியில்  அழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதே போல் தினமலர் ஊடகத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்களை, குருவிமலை கிராமத்தில் போலீசார் அழித்தனர் என்று மார்ச் 08, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோ, இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் 7, 2026 அன்று 10 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாக தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க