YouTurn

வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்கிய அமைச்சர் முத்துச்சாமி என்று பரவும் பழைய வீடியோ!

வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்கிய அமைச்சர் முத்துச்சாமி என்று பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்தத் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சுமார் 400 பேருக்கு பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

பரவிய செய்தி

டாஸ்மாக் துறை அமைச்சருக்கு ஈரோடு முத்துச்சாமி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொடுக்கும் அந்த காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது…

X Link / Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் மே 4ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இந்நிலையில் அமைச்சர் முத்துச்சாமி ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது விகடன் ஊடகத்தில் ”`இரண்டு மினி லாரிகளில் வந்த பரிசுப்பொருள்கள்’ - ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வழங்கிய அமைச்சர் முத்துசாமி” என்ற தலைப்பில் மார்ச் 25, 2023 அன்று பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்தத் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட சுமார் 400 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் News Uriyadi ஊடகப்பக்கத்தில் அக்டோபர் 17, 2023 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  தொடர்ந்து மக்களின் குறைகள் கேட்டறிந்த அமைச்சர், சம்மந்தபட்ட அரசு துறைசார்ந்த அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, Minister Muthusamy Team என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 24 டிசம்பர், 2023 அன்று இது குறித்தான புகைப்படங்கள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, ஈரோடு அமைச்சர் முத்துச்சாமி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொடுக்கும் வீடியோ என்று பரவுவது தவறானவை. பரவி வரும் வீடியோ 2023ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கிய போது எடுக்கப்பட்டதாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க