YouTurn

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறாகப் பரவும் பழையப் பதிவு!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறாகப் பரவும் பழையப் பதிவு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் பதிவு கடந்த 2020-ல் பதிவுசெய்யப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை போலவே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கர்கள் RJ பாலாஜி, ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களும் "Victim" series promotion-காக தங்களது எக்ஸ் பக்கங்களில் "The victim" tag ஐப் பயன்படுத்தி பதிவு செய்துள்ளனர்.

பரவிய செய்தி

சிரிச்சு மாளல

எதுக்கு சார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ய டாக் பண்ணேங்க

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ‘TheVictim’  என்ற hastag-ஐ பயன்படுத்தி, “ஒவ்வொரு முறையும், கடும் மழைக்கு சென்னை இரையாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா?“, என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது போன்றொரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை டேக் செய்திருப்பதும் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன?  

பரவி வரும் இந்த பதிவில் 29/10/2020 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் தேடிப் பார்த்த போது, அதே தேதியில் இதே பதிவு இருந்ததை பார்க்கமுடிந்தது. அதிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் டேக் செய்யப்பட்டிருந்தது. 


இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் எக்ஸ் பக்கத்திற்கு சென்று பார்த்த போது, The Victim  என்ற hastag-ஐ பயன்படுத்தி, ”நான் சாலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குற்றவாளிகளால் மூலையில் தள்ளப்படும் அளவிற்கு சென்றேன். எப்படியோ அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்தேன். அதைப் பற்றி நினைக்கும் போது இன்னும் நடுக்கம் ஏற்படுகிறது” என்று இயக்குநரும், நடிகருமான RJ பாலாஜியை டேக் செய்து பதிவிட்டிருந்தார். 


இது குறித்து தேடிப் பார்க்கும் போது, 2022ல் இயக்குநர்கள் சிம்புதேவன், எம்.ராஜேஷ், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கிய VICTIM என்ற வெப் தொடருக்கான promotion-காக தங்களது எக்ஸ் பக்கங்களில் "The victim" tag ஐப் பயன்படுத்தி பதிவு செய்திருந்தது தெரியவந்தது. 


இவர்களை போல் RJ பாலாஜி, சிவகார்த்திகேயன், அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஆர்யா போன்ற பிரபலங்களும் தங்களது எக்ஸ் பக்கங்களில், "The victim" tag ஐப் பயன்படுத்தி பதிவு செய்திருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, பரவி வரும் பதிவு 2020ல் "Victim" series promotion-காக பதிவிடப்பட்டது உறுதியானது.  உதயநிதி ஸ்டாலினை போலவே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கர்கள் RJ பாலாஜி, ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களும் தங்களது எக்ஸ் பக்கங்களில் "The victim" tag ஐப் பயன்படுத்தி பதிவு செய்துள்ளனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க