
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
பரவிய செய்தி 2: தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் இந்த போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பண்டிகையின் காரணமாக தற்போது போராட்டத்தை ஒத்துவைக்குமாறும் ஊழியர்களை வலியுறுத்தியுள்ளது. எனவே தற்காலிகமாக இந்த போராட்டம் வருகின்ற ஜனவரி 19 வரை தொழிற்சங்கங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுபவமில்லாமல் பேருந்து ஓட்டியதால், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய கொடுமைகளைப் பாருங்கள் என்று கூறி பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.
எவன் அப்பன் வீட்டு பணத்தில் இதை சரி செய்வீர்கள் @CMOTamilnadu ???
தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ் அரசு பேருந்து ஒன்றும் விளையாட்டு வாகனம் இல்லை...#ADMK_TNJ pic.twitter.com/xbJiMOGqD1
— Manimaran (@kmani2011) January 9, 2024
மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில், திருச்சியில் to திண்டுக்கல் நோக்கி தற்காலிக ஓட்டுனர் ஓட்டி வந்த அரசு பேருந்து, கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்... pic.twitter.com/LYUNtEtTge
— Savukku Shankar Army (@Mahi1987Mass) January 10, 2024
ஸ்ட்ரைக் போற போக்க பாத்தா பனிமனையில ஒரு பஸ்ஸும் இருக்காது தளபதியாரே ... pic.twitter.com/MI6dAn4e6E
— нαяι (@Hari46620091) January 10, 2024
உண்மை என்ன ?
தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்து என்று கூறி மூன்று புகைப்படங்களை சேர்த்து சிலர் பரப்பி வந்தனர். அந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை அறிய முடிந்தது.
இந்தப் புகைப்படங்களில், சாலையை விட்டு வெளியே சாய்ந்து கிடக்கும் பேருந்தின் புகைப்படம், கடந்த 2018-லேயே சமயம் ஊடகத்தில் "தற்காலிக ஊழியா்களால் இயக்கப்படும் பேருந்துகள்: அதிகாிக்கும் தொடா் விபத்துகள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதே போன்று புதர்களுக்குள் ஒரு பேருந்து நிற்பது போன்ற புகைப்படத்தையும், கடந்த 2018-லேயே புதிய தலைமுறை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் காண முடிந்தது. மேலும் அதில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்ததாக, பாலத்தின் பகுதியில் பேருந்து குறுக்கே நிற்கும் பேருந்தின் புகைப்படம், கோவை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தது. அது சாதாரண பேருந்தான வெள்ளை போர்டு உடன் இருக்கிறது. ஆனால், 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில் மகளிர் இலவச பேருந்து சேவையை முன்னிட்டு வெள்ளை போர்டு பேருந்துகளின் முகப்பு பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டன.
மேலும், ஆறு பேருந்துகள் அடுத்தடுத்து இடைவெளியின்றி மோதிக் கொண்டு நிற்கும் வீடியோ குறித்து தேடியதிலும், இது கடந்த 2019 நவம்பர் 24 அன்றே அழகு அரூர் / Azhagu Harur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்ததாக, பேருந்து தலைகீழாக கவிழ்ந்து நிற்கும் புகைப்படம் குறித்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், இந்தப் புகைப்படம் கடந்த 2023 ஜூன் 25 அன்று NDTV ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ளது. அதில், இது திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்ட போது ஏற்பட்ட விபத்து என்றும், இந்த விபத்தில் 5 பேர் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் பேருந்து ஒன்று வயல் பரப்பில் உள்ள ஓடையில் தடுமாறி நிற்பதைப் போன்ற புகைப்படமும், தற்போது தற்காலிக ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்து என்று கூறி தவறாகப் பரப்பப்படுகிறது. இதுவும் கடந்த 2022-ல் நாகர்கோவிலில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் தான் என்பதை New Indianexpress வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெளிவாகிறது.

தற்காலிக பேருந்து ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்து மற்றும் பேருந்தை கையாள முடியாமல் பாதியில் நிற்பது உள்ளிட்ட சம்பவங்கள் சில செய்திகளில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், பழைய மற்றும் தவறான படங்களையும், வீடியோக்களையும் தற்போது தவறாக பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்துக்கள் என பழைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டவை எனத் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.