யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை ஒன்றின் பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றதால் ஏற்பட்ட சர்ச்சையால் அப்போதே அந்த பெயர் பலகை மாற்றப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
‘திமுக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்தி திணிப்பு பாதகமானதாக இருக்காது’ - இந்து மக்கள் கட்சி


விரிவான விளக்கம்
மதுபானக் கடை ஒன்றின் பெயர் பலகை ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ‘திமுக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்தி திணிப்பு பாதகமானதாக இருக்காது’ என்று ‘இந்து மக்கள் கட்சி’ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பி வருகிறது.
Hindi Imposition will not be affected by this for DMK as it's their govt running these shops. pic.twitter.com/keioF7tFHl
பராசக்தி படம் பல்லிளித்த இடம்
---
ஹிந்தி தெரியாது போடா என்று சொன்ன திராவிடத்தின் இன்றைய நிலை~👇
🤣😂🤭🤗⚫🔴 💪💪#DMKDestroyedTN #DravidaModel #தமிழினப்பகைதிராவிடம் #TASMAC pic.twitter.com/r1PEzmZcp9
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். இது குறித்து ‘ABP தமிழ்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

2024 ஜனவரி மாதம் வெளியாகியுள்ள அந்த செய்தியில், ‘நாமக்கலை அடுத்த முதலைப்பட்டி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை ஒன்றில் இந்த பெயர் பலகை வைக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து நடந்த சர்ச்சையால் இந்த பெயர் பலகை அப்போதே மாற்றப்பட்டுவிட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு என்று பரவும் நீக்கப்பட்ட பழைய புகைப்படம்!@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/KLeRb0OpiI
மேலும், பரவி வருவது 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்றும் அந்த பெயர் பலகை அப்போதே மாற்றப்பட்டுவிட்டதாகவும் ‘தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்’ உறுதிபடுத்தியுள்ளது.
முடிவு:
2024ஆம் ஆண்டு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையால் அப்போதே அது மாற்றப்பட்டுவிட்டது. இந்த பழைய சம்பவம் குறித்த புகைப்படத்தை தற்போது நடந்ததாக ‘இந்து மக்கள் கட்சி’ தவறான தகவலை பரப்பி வருகிறது.