யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திருநெல் வேலி நயினார் குளம். நேற்று 400 மேல் தாமரை மலர்ந்தது. இதை காண மக்கள் கூட்டமாக பார்த்து செல்கிறார்கள்..

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 04 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் "திருநெல்வேலியில் அமைந்துள்ள நயினார் குளத்தில் நேற்று (ஜூன் 30) 400 தாமரைகளுக்கு மேல் மலர்ந்துள்ளன. இது ஒரு மங்கள அறிகுறி. தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திரமோடி வந்திருக்கும் நேரம் இது நிகழ்ந்துள்ளது" என்று கூறி குளத்தில் தாமரைகள் நிறைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் புனேவில் எடுக்கப்பட்டது என்று கூறி கடந்த 2022 லேயே "Whats Hot Pune" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இது குறித்து மேலும் தேடியதில், இதே புகைப்படம் ISTOCK இணையதளப் பக்கத்தில், 2016 அக்டோபர் 11 அன்று "ThuTruong" என்ற புகைப்படகலைஞரின் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

அவருடைய பக்கங்களில் பெரும்பாலானவை சீன உணவுகளையும், சீனர்களையும் அடிப்படையாகக் கொண்டவையாக பதிவிடப்பட்டிருந்தன.

ஆனால் குளத்தில் தாமரைகள் இருப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இவை கடந்த 2016 இல் இருந்தே இணையதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
மேலும் படிக்க: இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே’ என்று மன்மோகன்சிங் கூறியதாக பொய் பரப்பும் பிரதமர் மோடி !
முடிவு:
நம் தேடலில், திருநெல்வேலி நயினார் குளத்தில் மோடி வருகையையொட்டி மலர்ந்துள்ள தாமரைகள் எனப் பரவும் புகைப்படம், 2016 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவிவரும் பழைய புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.

திருநெல் வேலி
நயினார் குளம்.
நேற்று 400 மேல்
தாமரை மலர்ந்தது
இதை காண மக்கள் கூட்டமாக பார்த்து செல்கிறார்கள்.
இது ஏதோ மாபெரும் மங்கள அறிகுறியாக முன்கூட்டியே காட்டுகிறது என்று பெரிய வர்கள் கூறுகிறார்கள் pic.twitter.com/QCTe4QpDRn
— Maha மோடியின் குடும்பம் (@Maha39574742) May 31, 2024
தமிழகத்தில் மோடி இருக்கும் போது.
திருநெல்வேலி
நயினார் குளத்தில்.
நேற்று 400 மேல்
தாமரை மலர்ந்தது
இதை காண மக்கள் கூட்டமாக பார்த்து செல்கிறார்கள்.
இது ஏதோ மாபெரும் மங்கள அறிகுறியாக முன்கூட்டியே காட்டுகிறது என்று பெரிய வர்கள் கூறுகிறார்கள். @annamalai_k #ModiAgain pic.twitter.com/tHxmJZwmzU
— Muralidharan Ravichandran (மோடியின் குடும்பம்) (@Sanghivlr) May 31, 2024