யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் ஏழு மணி நேரம் தாமதமாக சென்றது. அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைபடத்தை, தற்போதைய இண்டிகோ நிறுவன பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
டவுன் பஸ்சுக்கு காத்திருப்பது போல் மக்கள் விமானத்தில் செல்ல காத்திருக்கிறார்கள்…மோடி ஆட்சியின் சாதனை

விரிவான விளக்கம்
இண்டிகோ விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
இதற்கிடையில், இண்டிகோ விமானங்களுக்கு அருகில் பயணிகள் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. அதில் விமான நிலையம் இப்போது ஒரு பேருந்து நிலையம் போல் காட்சியளிப்பதாகவும், இது தான் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டவுன் பஸ்சுக்கு காத்திருப்பது போல் மக்கள் விமானத்தில் செல்ல காத்திருக்கிறார்கள்🤦 மோடி ஆட்சியின் சாதனை😡 pic.twitter.com/BCRrbicbsH
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது The Economic Times ஊடகத்தில் மே 14, 2018 அன்று, “IndiGo passengers stranded on tarmac for 7 hours for non-availability of crew” என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இண்டிகோ டெல்லி - பெங்களூரு விமானம் பணியாளர்கள் இல்லாததால் 7 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் விமான நிலையத்தின் தார் சாலைகளில் காத்திருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, Times Of India ஊடகத்தில் ”Many left stranded on tarmac as storm delays flight by 7 hrs” என்ற தலைப்பில் மே 15, 2018 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் புயல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோவின் டெல்லி-பெங்களூரு விமானம் (6E 2977) சுமார் ஏழு மணி நேரம் தாமதமானது. மேலும் பயணிகள் விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானம் ஏழு மணி நேரம் தாமதமாக சென்றது. அப்போது எடுக்கப்பட்ட பழைய புகைபடத்தை, தற்போதைய இண்டிகோ நிறுவன பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.