யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட பழைய வீடியோவாகும். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிபெரும் கட்சியாக வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சி ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்திருக்கிறது. கடந்த மே 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதல்வராகவும், மற்றும் சில தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டார்கள். பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை அமைச்சகத்தை முதல்வர் விஜய்-யே எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளிலே, 24 மணிநேரமும் ரோந்து மேற்கொள்ளும் வகையில் போலீஸாருக்கு இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக ’பாலிமர்’ செய்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தவெக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
CM விஜய் தலைமையில் ஆனா tn போலீஸ்👍🤝👏 pic.twitter.com/bTfyOIVQZM
Good initiative taken immediately by
CM Vijay 🔥🔥 pic.twitter.com/68oRgEScZ4
உண்மை என்ன?
பரப்பப்படும் செய்தி வீடியோவின் keyframe-களைக் கொண்டு கொண்டு தேடுகையில், ’பாலிமர்’ செய்திகள் ஊடகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்றே வெளியிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.
இனி 24 மணி நேரமும் Patrol இருக்கும்.. போலீஸ் அலர்ட்டா இருக்க இத ஸ்டார்ட் பண்ணிருக்கோம் - சேலம் எஸ்.பி பேட்டி#Salem | #Police | #patrol | #SP | #PolimerNews pic.twitter.com/2nmGLl9ldZ
மேலும் ’சேலம் மாவட்ட காவல்துறை’யின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்திலும் ஜனவரி 24ஆம் தேதியே இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. மேலும் அந்த பதிவில், ‘சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் அவர்கள் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் செயல்படும் 11 காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இருசக்கர வாகன ரோந்தினை தொடங்கி வைத்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, இந்த வீடியோ கடந்த ஜனவரி மாதமே வெளியிடப்பட்டுள்ளதும், இந்த சம்பவம் திமுக ஆட்சியில் இருக்கும் போது நடந்தது என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
சென்ற திமுக ஆட்சியில் வெளியான பழைய செய்தி வீடியோவை தற்போது தவெக ஆட்சியில் நடந்த செய்தி என்று தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்புகிறார்கள்.

