யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட பழைய செய்தி இது. இதை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மொத்தம் ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாக வேட்புமனுவில் தகவல் என்று குறிப்பிட்டு புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பலரும் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையடுத்து உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், அதில் உள்ள தகவல்கள் தான் இது என்று குறிப்பிட்டு விமர்சித்தும், கிண்டல் செய்தும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டில் உள்ள செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், இது தற்போது வெளியிடப்பட்ட செய்தி அல்ல என்பதை அறிய முடிந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டே பரவி வரும் இதே நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது.

மேலும் ‘புதியதலைமுறை’ ஊடகப் பக்கத்தில் கடந்த 2021 மார்ச் 15 அன்று, “உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.28.82 கோடி“ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து ரூ.6.54 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்த சொத்து ரூ.28.82 கோடி என்றும், ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்“ என்றும் குறிப்பிட்டு அதில் வெளியிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “The News Minute“ ஊடகப் பக்கத்தில் கடந்த 2021 மார்ச் 16 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.1.35 லட்சம் கடன் உள்ளது“ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன் மூலம் கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட பழைய செய்தி இது என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பழைய செய்தியை பலரும் தற்போது பரப்பி வருகின்றனர்
முடிவு:
நம் தேடலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.1.35 லட்சம் கடன் உள்ளது என்று குறிப்பிட்டு பரவும் நியூஸ் கார்டு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதை தெளிவாக அறிய முடிகிறது.