YouTurn

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவும் பழைய நியூஸ்கார்டு!

“என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவும் பழைய நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்தது - பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு. 

X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக பாஜக தெரிந்தது” என்று கூறியதாகக் கூறி சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ் கார்டில், “பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் நமக்கு சந்தேகம் எழுந்தது. 


எனவே இது குறித்து ஆய்வு செய்ய பரவி வரும் நியூஸ் கார்டை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பாரத்த்தோம். அப்போது பரவி வரும் நியூஸ் கார்டு தற்போது வெளியிடப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2021 மார்ச் 03 அன்றே பரவி வரும் இந்த நியூஸ் கார்டு, சன் நியூஸ் ஊடகப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 


#ElectionUpdates | என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான் - பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews | #BJP | #ADMK pic.twitter.com/6RHQF6DY1r

— Sun News (@sunnewstamil) March 3, 2021


இதே போன்று, “Top Tamil News” ஊடகப் பக்கத்திலும் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து கடந்த 2021 மார்ச் 03 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும் அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டு இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் நெல்லையில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் என கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 


முடிவு:


நம் தேடலில்,  “என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு கடந்த 2021-ல் வெளியிடப்பட்ட பழைய நியூஸ் கார்டு என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.