YouTurn

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் ஹெலிகாப்டர் விபத்து வீடியோ எனப் பரவும் தவறான வீடியோ!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் ஹெலிகாப்டர் விபத்து வீடியோ எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஈரான் அதிபர் அந்த கடைசி நிமிடங்கள்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறி அந்நாட்டு ஊடகங்கள் மே 20 அன்று உறுதிப்படுத்தின. அவர் அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது தான், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ என்று கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்குவதையும் தெளிவாகக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவிற்கும் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

"டிவி சேனல் 24kz" என்ற யூடியூப் பக்கத்தில் "ஜார்ஜியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் துக்கம் அனுசரிக்கப்பட்டது" என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவின் முழுபகுதி 2022 ஜூலை 30 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இதில் சரியாக வீடியோவின் 0:22 வினாடி பரவி வரும் வீடியோவோடு ஒத்து போவதை காணலாம்.



மேலும் இது குறித்து Georgia Today ஊடகத்திலும் 2022, ஆகஸ்ட் 04 அன்று "சோகமான குடௌரி விபத்தில் 8 பேர் பலி, 1 சுற்றுலா பயணி பாராகிளைடிங் விபத்தில் பலி" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஜூலை 29 அன்று மலைப்பகுதியான ஜார்ஜியாவின் குடாரி ரிசார்ட்டில் விழுந்த பாராகிளைடர்களுக்கான மீட்பு நடவடிக்கையின் போது, உள்நாட்டு விவகார அமைச்சகம் மற்றும் எல்லை காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் 8 பேர் இருந்தனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் ஜார்ஜியா நாட்டில் 2022 இல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து வீடியோவை, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: சூரத் பேருந்து விபத்து தொடர்பான பழைய வீடியோவை மதரீதியாகப் பரப்பும் வலதுசாரிகள் !

மேலும் படிக்க: தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் நிகழ்ந்த விபத்துகள் எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !

முடிவு:

நம் தேடலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வீடியோ என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, ஜார்ஜியா நாட்டில் 2022 இல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்த்தோடு தொடர்புடைய பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க