யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2024 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட பழைய நியூஸ் கார்டை, தற்போது வெளியிடப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனால், அமைச்சரவை முதல் வரிசையில் இருந்து பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருப்பதால் மருத்துவர்கள் பரிசோதனை; இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டதாக தகவல் என்றும் நியூஸ் கார்ட் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டில் 28-04-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நாளில் இது குறித்து தேடிய போது, எந்த செய்தியும் வெளிவரவில்லை.
இதையடுத்து polimer ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டது உண்மைதானா என்பது குறித்து அறிய polimer ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் இது குறித்து தேடினோம். அப்போது கடந்த July 21, 2024 அன்று பரவி வரும் இதே நியூஸ் கார்டு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் தேடி பார்த்ததில், சமயம் ஊடகத்தின் இணையதள பக்கத்தில் July 21, 2024 அன்று, "செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு? : ஐசியுவில் தீவிர சிகிச்சை - நாளை முக்கிய டெஸ்ட்!" என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதே போல் 21 Jul 2024 தந்தி டிவியின் யூடியூப் பக்கத்தில் "#BREAKING || மூச்சு விடுவதில் சிரமம்.. செந்தில் பாலாஜி ஐ.சி.யூ-வில் அனுமதி" என்ற தலைப்பில் நேரலை ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த 2022-ல் வெளியிடப்பட்ட தந்தி டிவியின் நியூஸ் கார்டை, தற்போது வெளியிட்டதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவதை அறிய முடிகிறது.
இதற்கு முன்பும் இதே போன்று பல நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகல் எனப் பரவும் போலி நியூஸ்கார்டு!
மேலும் படிக்க: '2026 சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள்' எனப் பரவும் தவறான நியூஸ்கார்டு!
மேலும் படிக்க: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குநர் பாக்யராஜ் கூறியதாகப் பரவும் பழைய நியூஸ் கார்டு.
முடிவு :
நம் தேடலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி என்று கூறி பரவி வருவது பழைய நியூஸ் கார்டாகும்.
