YouTurn

"நான் மலையாளி" என சீமான் மேடையில் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்த வீடியோ !

"நான் மலையாளி" என சீமான் மேடையில் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்த வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நான் மலையாளி தான்... சீமான்Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ், தமிழர் எனப் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழரே அல்ல என்கிற கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதுண்டு.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், நீ ஏன் இனம் மாறுற, அதுலையே ஏமாத்துறல. நீ ஏன் இனம் மாறுற, நீ தமிழன் என சொல்றதுக்கு உனக்கு என்ன தேவை இருக்கு எனக் கூறுகிறார்.அடுத்ததாக மேடையில் சீமான் பேசுகையில், என்னையே கேள் நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன் " எனப் பேசுகிறார். இவ்விரண்டு வீடியோக்களும் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





" நான் மலையாளி என்று தான் சொல்வேன் " என சீமான் பேசும் வீடியோ பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பப்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

உண்மை என்ன ? 

சீமான் மேடையில் மலையாளி எனப் பேசும் வீடியோ குறித்து நாம் தமிழர் கட்சியின் யூடியூப் சேனலில் தேடுகையில், 2016ம் ஆண்டு மதுரையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசிய முழு வீடியோ கிடைத்தது. வைரல் வீடியோவின் பகுதியும், மதுரை கூட்டத்தின் வீடியோவின் பகுதியும் ஒன்றாக இருப்பதை அறிய முடிந்தது.



மேற்காணும் வீடியோவில் சீமான் பேசுகையில் 19.20வது நிமிடத்தில், " நான் என்னமோ புதுசா தமிழர் நாட்டை தமிழர் ஆளனும் சொல்றதா.. நீ கேளு கேரளாவை ஆண்டுக் கொண்டிருக்கும் ஐயா உம்மன்சாண்டிக் கிட்ட கேளு. அவர் சொல்றாருல, வெறிக்கொண்டு அந்த நாட்டின் இளைஞர்கள் அதிகாரத்தைக் கேட்டு வருகிறார்கள். இதை நான் சொல்லல, அவர் சொல்லுறாரு. அவர்கள் அதிகாரத்தைக் கேட்பது சரிதான், அவர்கள் நிலத்தை அவர்கள் தான் ஆள வேண்டும் என்று அவர் சொல்றாரு.

என்னையே கேள் நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன். ஒரு தமிழன் முதலமைச்சராகி அந்த நாட்டை ஆளுகின்றான் என்றால் அவன் பதவி ஏற்கும் விழாவில் என்னை அழைக்கவில்லை என்றாலும் முன்வரிசையில் இருந்து வாழ்த்துவேனு சொல்றாரு. அந்த உணர்வு உங்க எல்லாருக்கும் வரணும் " எனப் பேசி இருக்கிறார்.

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாக சீமான் பேசிய வீடியோவில் இருந்து நான் மலையாளி என்று தான் சொல்வேன் எனப் பேசிய பகுதியை மட்டும் எடிட் செய்து தன்னையே கூறியது போல் பரப்பி உள்ளனர்.

மேலும் படிக்க : தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் எனப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : தேள் கடித்த உடன் தண்ணீரில் கை வைத்தால் விஷம் இறங்கிவிடுமா ?

இதற்கு முன்பாக, சீமான் பேசிய பொய்கள் குறித்தும், அவருக்கு எதிராக பரப்பப்பட்ட பொய்கள் குறித்தும் யூடர்ன் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், நான் திராவிடனா, மலையாளியா என்றால் நான் மலையாளி என்று தான் சொல்வேன் என சீமான் பேசியதாகப் பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவில் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாக சீமான் பேசியதை தவறாகப் பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க