YouTurn

தமிழ்நாட்டில் அணுக் கதிர்வீச்சால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியதா? சீமான் சொல்லும் பொய்!

தமிழ்நாட்டில் அணுக் கதிர்வீச்சால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியதா? சீமான் சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இங்கிலாந்து, ஐப்பான் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டவை அல்ல.

பரவிய செய்தி

“தமிழ்நாட்டில், அணு உலையின் கதிர்வீச்சு கலந்த தண்ணீரால் கடல்வாழ் உயிரணங்கள் இறந்து கரை ஒதுங்குகிறது” - சீமான்.  


YouTube Link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் மிகப்பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கும் காட்சியையும், திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கும் புகைப்படங்களையும் திரையில் காட்டி, ‘அணு உலையை குளிர்விப்பதற்காக தண்ணீர் பயன்படுத்துவார்கள். அந்த தண்ணீரை அப்படியே கடலில் கலந்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் அணுக் கதிர்வீச்சால் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கடற்கரையில் கரை ஒதுங்குகிறது. இதெல்லாம் நமது ஊரில் (தமிழ்நாட்டில்) நடக்கிறது’ என்று பேசினார். 



உண்மை என்ன? 


சீமான் திரையில் காட்டிய வீடியோ மற்றும் புகைப்படங்களை ‘Reverse Image Search’ தேடினோம். முதலில் ‘சத்தியம் டிவி’ யூட்யூப் தளத்தில் வெளியான ஒரு செய்தி வீடியோவைக் காணமுடிந்தது. 



அதில், ‘வடக்கு ஜப்பானின் ஹகோடேட் (Hakodate)கடற்கரையில் ஆயிரக் கணக்கான டன் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானின் புகுஷிமாவில் இயங்கும் அணு உலையின் கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலந்ததால் இந்த மீன்கள் இறந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதேபோல் மிகப்பெரிய கடல்வாழ் உயிரணமான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய புகைப்படங்களை குறித்து தேடியபோது, ‘On Demand News’ என்ற யூட்யூப் தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. இது இங்கிலாந்து நாட்டின் கடற்கரையில் திமிங்கலங்கள் இறந்து ஒதுங்கிய போது எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் இது குறித்து தேடியபோது, ‘The Guardian’ செய்தித்தளத்தில் வெளியான கட்டுரையைக் காணமுடிந்தது. அதன் படி, இந்த திமிங்கலங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள கடற்கரையில் இறந்து ஒதுங்குவதற்கு முக்கியமான காரணமாக இந்த நாடுகளின் கடலில் உள்ள ஆழும் குறைவான பகுதிகள் (shallow sea) தான் சொல்லப்படுகிறது. 


தெற்கு அட்லாண்டிக் பகுதியில் திமிகலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வயது குறைந்த திமிங்கலங்கள் வடக்கு கடல் பக்கமாக உணவு தேடி வருகின்றன. இந்த கடல் ஆழும் குறைந்ததாக இருப்பதால் இயற்கையாகவே மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட திமிங்கலங்களால் நீந்த முடிவதில்லை. அதனால் அது திரும்பிச் செல்வதும் சிரமானது. இதனால் அது அவ்விடத்தில் சிக்கிக்கொள்கிறது. உணவு கிடைக்காமல் இறந்து கரை ஒதுங்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கும்  வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் இங்கிலாந்து, ஐப்பான் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


இங்கிலாந்து, ஐப்பான் போன்ற நாடுகளில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கும்  வீடியோகள் மற்றும் புகைப்படங்களை தமிழ்நாட்டில் நிகழ்ந்து என்று சீமான் தவறான தகவலை பரப்புகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க