YouTurn

ஊடகவியலாளர் மதுபோதையில் இருந்ததாக தவறான தகவலை பரப்பும் சாட்டை துரைமுருகன்!

ஊடகவியலாளர் மதுபோதையில் இருந்ததாக தவறான தகவலை பரப்பும் சாட்டை துரைமுருகன்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 17 அன்று செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை சீமானின் பவுன்ஸர்கள் உள்ளே அனுமதிக்காததால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அதை மேடையிலிருந்து பார்த்த சீமான் திடீரென ஆவேசமாக கீழே இறங்கி சென்றார். அவரை தடுக்க முயன்ற தனது கட்சியின் தொண்டரையும் பளார் என அடிப்பதை வீடியோவில் தெளிவகாக் காண முடிகிறது.

பரவிய செய்தி

மதுபோதையில் இருந்த ஊடகவியலாளரை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் சீமான் அவ்வாறு சென்றார் என்றும், மேலும் கீழே செல்லும் போது தடுத்த தொண்டரை தள்ளிப்போ என்று தான் கூறுகிறார் - சாட்டை துரைமுருகன் 

image.png

Youtube Link 

விரிவான விளக்கம்

செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனாரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் செஞ்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தியாளர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் அந்த செய்தியாளர் மது போதையில் இருந்ததாகவும், யாரும் அவரை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் சீமான் அவ்வாறு சென்றதாகவும், கீழே செல்லும் போது தடுத்த தொண்டரை தள்ளிப்போ என்று தான் கூறியதாகவும் நாதகவை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 


உண்மை என்ன? 

சாட்டை துரைமுருகன் கூறிய இந்த வீடியோ குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில் “கீழே இருந்து வந்த சத்தம்..கடுப்பாகி இறங்கிய சீமான்..கூட்டத்தில் பெரும் பரபரப்பு... | ntk seeman” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 17 அன்று இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். அதில் சரியாக 2:11 நிமிடத்தில் மேடையில் இருந்து இறங்கி செல்லும் சீமான், அவரை தடுக்க முயன்ற கட்சியின் தொண்டரை அடிப்பது போன்ற காட்சிகளை பார்க்கமுடிந்தது. இதையடுத்து அந்த செய்தியாளரிடம் சென்று பேசுவதும் பதிவாகியிருந்தது. 


இதை உறுதி செய்ய வேறு ஏதேனும் வீடியோ கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்தோம். அப்போது Sakthi saravanan என்ற முகநூல் பக்கத்தில், ”மேடையை விட்டு கீழே குதித்து தொண்டரை தாக்கிய சீமான்” என்று குறிப்பிட்டு இந்த வீடியோ பதிவாகியிருந்தது. அதில் மேடையில் இருந்து இறங்கிய சீமான், அவரை தடுக்க முயன்ற தொண்டரை பளார் என்று அடிக்கும் காட்சியை தெளிவாக பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து செய்தியாளர் மதுபோதையில் இருந்தார் என்பதை குறித்து தேடினோம். அப்போது ஆகஸ்ட் 18 அன்று News 18 Tamilnadu ஊடகத்தில் ”நாதக பொதுக்கூட்டத்தில் திடீர் சலசலப்பு... மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான் - என்ன நடந்தது?” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உடனே மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

image.png


முடிவு: 

எனவே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை, சீமானின் பவுன்ஸர்கள் உள்ளே அனுமதிக்காததால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் சீமான் கீழே இறங்கி சென்றுள்ளார். இதை மதுபோதையில் இருந்த ஊடகவியலாளரை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் அவ்வாறு சீமான் சென்றதாக சாட்டை துரைமுருகன்  அவரது வீடியோவில் தவறாகத் திரித்துப் பேசியுள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க