YouTurn

மேகம் வானிலிருந்து கீழே விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மேகம் வானிலிருந்து கீழே விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது சுரங்கப் பணிகளின் காரணமாக வெளியேற்றப் பட்ட உயர் அழுத்த வாயுக்களின் திரட்சி, சுற்றுச்சூழலின் குறைந்த வெப்பநிலை காரணமாக காற்றில் மிதந்தது.

பரவிய செய்தி

வானத்தில் இருந்து கீழே விழுந்த மேகம்.

 

Instagram Link

விரிவான விளக்கம்

வானில் வெள்ளை  நிறத்தில் மேகம் போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பொருள், பூமியில் வந்து விழும் காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு 'வானத்தில் இருந்து மேகம் கீழே விழுந்ததாக' பரப்பப்படுகிறது.

 

https://youtu.be/664SXvjrzEI?si=cKDANbWUDPTpEu4Q

 

உண்மை என்ன:

 

பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், 'VOI' என்ற செய்தித்தளத்தில் ஒரு செய்திக் கட்டுரையை காண முடிந்தது.

 

அதன்படி, இந்த சம்பவம் இந்தோனேசியாவின் ‘மத்திய கலிமந்தன்’ என்ற மாகாணத்தில் உள்ள 'மௌரா துஹுப்' என்னும் இடத்தில் நடந்துள்ளது. 'வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் ஆகியவற்றிற்கான நிறுவனமான BMKG' இது குறித்து விளக்கமளித்துள்ளது.

 

'வானில் இருந்து மிதந்து வந்து பூமியில் விழந்த அந்த வெள்ளை நிற பொருள், மேகம் அல்ல. அது மனித நடவடிக்கைகளால் (Human activities) ஏற்பட்ட நீராவி அல்லது பிற வாயுக்களின் திரட்சி மட்டுமே' என்று BMKG நிறுவனத்தின் பொது வானிலை பிரிவின் இயக்குனர் ஆண்ட்ரி ராம்தான் குறிப்பிட்டுள்ளார்.

 

மேகம் இப்படி திரட்சியாக  பூமிப் பரப்பின் மீது விழாது. மேகங்கள் மிகச் சிறிய நீர்த் துளிகளின் திரட்சியால் ஆனது. அது காற்றின் திசையோட்டத்தின் காரணமாக  வளி மண்டலத்தில் மிதக்கிறது. மேகம் வளி மண்டலத்தில் இருந்து  பூமிப் பரப்பை நோக்கி வரும் போது, பூமியில் வேறுபட்ட சூழல் காரணமாக மேகத்தில் உள்ள நீர்த் துகள்கள் ஆவியாகிவிடும் (Evaporated).

 

இதனால், நாம் வீடியோவில் காண்பது போன்ற நிகழ்புப் போக்கு, மனித நடவடிக்கைகளால் உருவானதாகவே இருக்க முடியும். குறிப்பாக, சுரங்கப் பணிகளின் போது வெளியான உயர் அழுத்த வாயு குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதமுள்ள சூழல் காரணமாக ஒடுக்கத்திற்கு (Condensation) உள்ளாகி இதுபோன்ற மேக வடிவத்தில் உருவாகியுள்ளது. இப்படி ஒடுக்கத்தின் மூலம் உருவான வாயுத் திரட்சி, புவி ஈர்ப்பு காரணமாகவோ அல்லது சுற்றுச்சூழலில் உள்ள காற்றை விட அதிக அடர்த்தி  (Density) கொண்டதாக இருப்பதாலோ பூமிப்பரப்பில் வந்து விழுகிறது.

 

மேலும் இப்படி நடப்பது எந்தவகையிலும் அபாயமானது அல்ல என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதிலிருந்து, வானில் இருந்து வெள்ளை நிறத்தில் மிதந்து வந்து பூமியில் விழுந்தது மேகம் அல்ல. அது சுரங்கப் பணிகளின் காரணமாக வெளியேற்றப் பட்ட  உயர் அழுத்த வாயுக்களின் திரட்சி என்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

சுரங்கப் பணிகளின் காரணமாக வெளியேற்றப் பட்ட உயர் அழுத்த வாயுக்களின் திரட்சி மிதந்து வந்து பூமியில் விழும் வீடியோ, வானிலிருந்து மேகம் கீழே விழுந்ததாக தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க