YouTurn

மோடியின் ஆட்சி குறித்து நிதின் கட்காரி விமர்சித்ததாகப் பரவும் தவறான தகவல்!

மோடியின் ஆட்சி குறித்து நிதின் கட்காரி விமர்சித்ததாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை. - மோடி அரசின் அமைச்சர் நிதின் கட்கரி


X link | Archive link

விரிவான விளக்கம்

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேசிய 19 வினாடி வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர் ”இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை” எனப் பேசியதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



உண்மை என்ன?

காங்கிரஸ் பதிவிட்டுள்ள நிதின் கட்காரியின் 19 வினாடி வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், ’TheLallantop’ என்னும் யூடியூப் பக்கத்தில் அவரது முழு நேர்காணல் கிடைக்கப்பெற்றது. 

அதில், 17வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய வீடியோவில் உள்ள பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் அவர், ‘நமது நாட்டின் GDP-யில் விவசாயத்தின் பங்கு வெறும் 12%, உற்பத்தித் துறையின் பங்கு 22 - 24%, சேவைத் துறையின் பங்கு 52 - 54%. ஆனால், மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியுள்ளனர். காந்தி இருந்த போது 90 சதவீதம் மக்கள் கிராமங்களில் வசித்தார்கள். அதில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 



காரணம் கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை. நிதானமான நிரந்தர வளர்ச்சி இல்லை. அதற்காக வளர்ச்சியே இல்லை என்று நான் சொல்லவில்லை. போதுமான வளர்ச்சி இல்லை என்று கூறுகிறேன். எங்களது அரசு வந்த பிறகு நாங்களும் நிறைய வளர்ச்சி திட்டங்களைச் செய்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார். 

அதாவது முந்தைய காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் நடந்துள்ளது. ஆனால், அவை போதுமானதாக இல்லை. தற்போது நாங்கள் வந்த பிறகும் நிறைய வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம் என்றுதான் அவர் கூறுகிறார். அதில் ஒரு சிறு பகுதியைமட்டும் காங்கிரஸ் கட்சி தங்களது எக்ஸ் பக்கத்தில் தவறாக பொருள்கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ளது. 

தான் பேசியதை தவறாக பரப்பியுள்ளதாக நிதின் கட்காரி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

முடிவு : 

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது கிராமங்களில் வளர்ச்சி இல்லை எனப் பேசியதாக காங்கிரஸ் கட்சி பதிவிட்ட தகவல் தவறானது. அவர் பேசியதின் சிறு பகுதியை மட்டும் தவறாக பொருள் கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ளனர். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க