யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அவர் தனது கண்டுபிடிப்புகளை பல்வேறு நாடுகளில் பதிவு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்.
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
அறிவியலாளர்களான நிகோலா டெஸ்லா மற்றும் எடிசனின் கண்டுபிடிப்புகள் பற்றி ‘சுதர்சனன் கணபதி’ என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், “நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லை. அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எடிசன் தனது கண்டுபிடிப்புகளுக்கு அவரது நிறுவனமான GE மூலம் காப்புரிமை வைத்துள்ளார். இதுதான் artist மற்றும் businessman-க்கு இடையேயான வித்தியாசம்” என்றுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய தகவல் குறித்துத் தேடியதில், தாமஸ் எடிசன் சுமார் 1000-ற்கும் மேற்பட்ட காப்புரிமை பெற்றுள்ளது உண்மைதான் என்பதை அறிய முடிந்தது. அதே நேரத்தில் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றது பற்றி ‘Tesla Museum’ வலைத்தளத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டெஸ்லா புடாபெஸ்டில் உள்ள மத்திய தந்தி அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, அவர் தனது கண்டுபிடிப்புகள் எதற்கும் காப்புரிமை பெற முயன்றதாக எந்த தகவலும் இல்லையென்றும், அமெரிக்காவில் எடிசனை விட்டு வெளியேறிய பிறகு ‘Electric arc lamp’-ற்கு முதன் முதலில் காப்புரிமை பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் மட்டும் 112 காப்புரிமைகளை டெஸ்லா பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி என இன்னபிற நாடுகளில் 199 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். நிகோலா டெஸ்லா பதிவு செய்துள்ள காப்புரிமை பட்டியலைக் கீழே காணலாம்.
மேற்கண்ட தகவல்களிலிருந்து டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லை என்பது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
முடிவு: