YouTurn

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடமணிந்தவர்கள் நமாஸ் செய்வதாகப் பரவும் தவறான வீடியோ !

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடமணிந்தவர்கள் நமாஸ் செய்வதாகப் பரவும் தவறான வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போலியான காலிஸ்தான் விவசாயிகள் மசூதியில் நவாஸ் ஓதுவதைக் காணுங்கள். இவர்கள் சீக்கிய வேஷம் போட்ட முஸ்லீம்களா அல்லது இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சீக்கியர்களா? ஆச்சரியமாக இருக்கிறது..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாகவே டெல்லி எல்லையில், சன்யுக்த் கிசான் மோர்ச்சா, பிகேயு (ஷாஹீத் பகத் சிங்), பிகேயு (ஏக்தா சித்துபூர்), கிசான் மஸ்தூர் மோர்ச்சா, பாரதிய கிசான் நௌஜவான் யூனியன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாய இயக்கங்கள் மூலமாக போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் விவசாயிகள் அமைப்பினர், ஒன்றிய அரசுடன் நடத்திய நான்காம் கட்ட பேச்சு வார்த்தையும், தோல்வியிலேயே முடிவடைந்தது. எனவே போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் "ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போலியான காலிஸ்தான் விவசாயிகள், மசூதியில் நவாஸ் ஓதுவதைப் பாருங்கள். இவர்கள் சீக்கியர்கள் போன்று வேடமணிந்த முஸ்லீம்களா அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்ட சீக்கியர்களா? என்று தெரியவில்லை" என்று கூறி 36 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



அந்த வீடியோவில் முஸ்லீம்கள் பலர் நவாஸ் செய்யும் மசூதி ஒன்றில், சீக்கியர் போன்று தோற்றம் கொண்டவர்களும், அவர்களுக்கு மத்தியில் நவாஸ் செய்வதைக் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், இந்த வீடியோவிற்கும், விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

கடந்த 2023 லேயே பரவி வரும் இதே வீடியோ "சகோதரத்துவம் (bhai chara), Sikhi Sikheiba, ஈத் அதா முபாரக், ஈத் முபாரக், ஒரு சீக்கியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன், ஈத் பெஷல்" என்று குறிப்பிடப்பட்ட ஹேஷ்டேக்குகளை கொண்டு "d€€p s@rd@rni" என்ற Sharechat பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.



இதன் மூலம் பரவி வரும் இந்த வீடியோ, கடந்த 2023 லிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேரம் பேசுவதாகப் பரவும் டிராக்டர் விற்பனை வீடியோ !

இதற்கு முன்பும் விவசாயிகள் போராட்டம் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: மாடுகளை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !

மேலும் படிக்க: விவசாயிகள் போராட்டத்தில் கோயில்களை தாக்குவதாக தவறாகப் பரவும் 2022ல் நடந்த பஞ்சாப் கலவர வீடியோ !

முடிவு:

நம் தேடலில், போராட்டத்தில் இருக்கும் சீக்கிய வேஷம் போட்ட முஸ்லீம்களைப் பாருங்கள் எனக் கூறி பரவும் வீடியோ தற்போது நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையது அல்ல என்பதையும், இந்த வீடியோ கடந்த 2023 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க