யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, ரஜினி ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்சனின் மனைவி அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை” என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
நெல்சன்க்கு ரஜினியால் ஏற்ப்பட்ட விபரீதம்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை. ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் விசாரணை; அடுத்தகட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் காவல்துறை திட்டம் எனத் தகவல்.
விரிவான விளக்கம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, நடிகர் ரஜினி, ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்சனின் மனைவி அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை” என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Nelsona fanboy fanboynanu pichai edukka vendiyathu
— Vignesh S (@svigneshchn) August 20, 2024
Ippadi oru news vanthaodaney as usual Rajnia abuse panna vendiyathu
Kaaka ulagam romba chinna ulagam
Thani ulagam
Romba asingam https://t.co/XxvtCpmCDv
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, ‘நியூஸ்18 தமிழ்நாடு’ ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடிப் பார்த்ததில், “நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்!” என்ற தலைப்பில் எந்த நியூஸ் கார்டையும் ‘நியூஸ்18 தமிழ்நாடு’ வெளியிடவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது. மேலும் பரவி வரும் நியூஸ் கார்டில் பல எழுத்துப்பிழைகள் இருப்பதையும் காணமுடிகிறது.
இதைத் தொடர்ந்து பரவி வரும் நியூஸ் கார்டை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 20 அன்று ‘நியூஸ்18 தமிழ்நாடு’ தனது சமூக ஊடகப் பக்கங்களில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது.
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 20, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை #Amstrong #Nelson #Nelsonwife #Monisha #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/X6EYnVF0iu
பரவி வரும் நியூஸ் கார்டுடன் இதை ஒப்பீடு செய்து பார்த்ததில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை, எடிட் செய்து “நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்!” என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

முடிவு:
நம் தேடலில், நெல்சனுக்கு ரஜினியால் விபரீதம் எனக் குறிப்பிட்டு ‘நியூஸ்18 தமிழ்நாடு’ ஊடகத்தின் பெயரில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறியமுடிகிறது.
