YouTurn

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

3 வருட பழைய செய்தியை, தற்போது நடந்தது போல் வெளியிட்ட News Tamil 24x7 ஊடகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பரவிய செய்தி

முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.. இந்த நாடே நாசமா போகணுமா? ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அர்ச்சகர்.!

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அர்ச்சகர் என்ற தலைப்பில் news tamil 24x7 ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேசும் ஒரு அர்ச்சகர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தால் கோயிலில் பணிப்புரியும் குருக்கள் உடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய தீர்வு தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுயிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது Shubham Sharma என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் செய்தியின் screenshot-ஐ பகிர்ந்து ஏப்ரல் 23, 2022 அன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தால், 12 வருடமாக கடவுளுக்கு சேவை செய்து வந்தவர்கள் பணிநீக்கம் செய்கின்றனர் என்றும், இது இந்தியாவில் பிராமணர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதற்கான அறிகுறி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதை வைத்து கூகுளில் தேடி பார்த்தோம். அப்போது ”நடுத்தெருவுல நிக்கிறோம்.. நாசமா போவீங்க! அனைத்து சாதியினர் அர்ச்சகராவதை எதிர்த்து கொதித்த அர்ச்சகர்” என்ற தலைப்பில் ஏப்ரல் 20, 2022 அன்று One India ஊடகம் செய்தி வெளியிட்டியிருந்தது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் நடுத்தெருவில் நிற்பதாகவும், அதை கொண்டு வந்தவர்கள் நாசமாய் போவார்கள் என்றும் திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் சாபம் விடும் வீடியோ வைரலாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில், தற்போது பரவி வரும் செய்தியின் screenshotகளும் இடம்பெற்றுயிருந்தது. 

image.png


அதே போல் ஏப்ரல் 21, 2022 அன்று "நடுத்தெருவுல நிக்கிறோம்...!அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதா..? குருக்கள் சாபம்"  என்ற தலைப்பில் Behindwoods Air ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தற்போது நடந்தது போல் News Tamil 24x7 ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க