YouTurn

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் விஜய் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் விஜய் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016)-இன் பிரிவு 34-ன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் (Reservation in Promotion) 4% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டது.

பரவிய செய்தி

CM Vijay orders implementation of 4% reservation for differently-abled persons and quick action on their requests.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு, அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

இது குறித்து keywords மூலம் கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது அரசுப் பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின் போதே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கான அரசாணை ஒன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 

image.png


அதில்  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016)-இன் பிரிவு 34-ன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் (Reservation in Promotion) 4% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டதை பார்க்கமுடிந்தது. மேலும் அரசாணையில்  4% இடஒதுக்கீடு அனைத்து பணிகளுக்கும் அல்ல; அரசு அடையாளம் காணும் (identified) பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டது. இந்நிலையில் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க