யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திருச்சி சிவா பேசியதாக அப்படியொரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று தந்தி டிவி, மாலை முரசு செய்திகள் ஆகிய நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 28 அன்று தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது அவசரகதியில் எடுத்த முடிவு. கட்சியில் பலருக்கு அதில் உடன்பாடில்லை’ என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியாதாக, மாலை முரசு செய்திகள், தந்தி டிவி ஆகிய செய்தித் நிறுவனங்கள் 22/12/24 தேதியில் News Card வெளியிட்டதாக சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
மாலை முரசு, தந்தி டிவி ஆகிய செய்தித் செய்தி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளில் இந்த News Card வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று தேடினோம்.
தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில், ”இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாலைமுரசு செய்திகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில், ”இந்த செய்தியை மாலைமுரசு வெளியிடவில்லை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து, ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திமுகவில் பலருக்கு உடன்பாடில்லை’ என்று தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டதாக பரப்பப்படும் News Card பொய்யாக உருவாக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் ’உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து திமுகவில் பலருக்கு உடன்பாடில்லை’ என்று செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் News Card பொய்யாக உருவாக்கப்பட்டது. தந்தி டிவி, மாலைமுரசு ஆகிய நிறுவனங்கள் அப்படியொரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
