YouTurn

‘நியூஸ் 18’ கருத்துக்கணிப்பில் தவெக 115 முதல் 125 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளதா?

‘நியூஸ் 18’ கருத்துக்கணிப்பில் தவெக 115 முதல் 125 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘'VoteVibe’s Vote Tracker' என்ற செய்தி முகமை வெளியிட்டுள்ள 2026 சட்டமன்ற தேர்லுக்கான கருத்து கணிப்பில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

CNN-News18 Tamilnadu Opinion Poll !!!


TVK+ —-> 115 - 125 seats (40%)


DMK+ —-> 104 - 114 seats (39%)


ADMK —-> 2 - 8 seats (13%)


NTK —-> 4%


New CM TVK விஜய்



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில்  “‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தவெக 115 முதல் 125 இடங்களில் வெற்றி பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது” என்று கூறி சமூக ஊடகங்களில் பலரும் வைரலாகப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதில்  திமுக கூட்டணி 104 - 114 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 2-8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளதாகப் பதிவிட்டிருந்தனர்.



உண்மை என்ன? 


பரவி வரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ‘'VoteVibe’s Vote Tracker' என்ற செய்தி முகமை வெளியிட்டுள்ள 2026 சட்டமன்ற தேர்லுக்கான கருத்து கணிப்பு குறித்து 'News 18' ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. 



அதில், சிஎன்என்-நியூஸ்18-ல் பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட “VoteVibe’s Vote Tracker” கணக்கெடுப்பின்படி, காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக தலைமையிலான கூட்டணிக்கு, 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குச் சற்று அதிகமாக, 113 முதல் 123 இடங்கள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவை உள்ளடக்கிய அதிமுக தலைமையிலான கூட்டணி, அதே கருத்துக் கணிப்பில் 106 முதல் 116 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தமிழக வெற்றி கழகம், 2 முதல் 8 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


இந்நிலையில் “‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தவெக 115 முதல் 125 இடங்களில் வெற்றி பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது” என பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.


இதே போன்று ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் கணக்கெடுப்பு இதற்கு முரணான ஒரு தகவலை அளிக்கிறது. அது, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 39–40 சதவீத வாக்குப் பங்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் 114–127 இடங்கள் கிடைக்கும் என்றும், இது அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் கணிக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 37-38 சதவிகித வாக்குப் பங்கையும், 104-114 இடங்களையும் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நம் தேடலில், ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தவெக 115 முதல் 125 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளதாகப் பரவுவது தவறான தகவலே. 


அரசியல் கட்சி சார்புடன் இருக்கிறதா தேர்தல் கருத்துக்கணிப்புகள்?


சமீபத்தில் சிஎன்என்-நியூஸ்18-ல் பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட, வோட்வைப் (VoteVibe) நிறுவனத்தின் வோட் டிராக்கர் (Vote Tracker) கருத்துக் கணிப்பின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக-பாஜக கூட்டணி 115 முதல் 125 இடங்களையும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 104 முதல் 114 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று சி.என்.என் நியூஸ் 18 ஊடகத்தில் வெளியான கருத்துக்கணிப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பின்னல்கள் வெளியே வந்துள்ளது.


#VoteTracker | What will seat sharing look like for political parties in #TamilNaduAssemblyElections?

Know what the
#OpinionPoll predicts#TamilNadu #TamilNaduElections | @VoteVibeIndia

Watch LIVE: https://t.co/vKwMT7UJ0M pic.twitter.com/3OuCtZW0GV

— News18 (@CNNnews18) April 6, 2026

Vote Vibe நிறுவனம் எடுத்த தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுக 115-125 தொகுதிகளிலும், திமுக 104-114 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு இதுவரை வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு மாறாக அமைந்திருப்பது பேசுபொருளானது.

இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட Vote Vibe நிறுவனத்தின் நிறுவனராக அமிதாப் திவாரி இருக்கிறார். ஏற்கனவே இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. Pramanya Stratergy என்ற நிறுவனமும், Vote Vibe நிறுவனமும் சேர்ந்துதான் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை நடத்தின.




Vote Vibe நிறுவனர் அமிதாப் திவாரிக்கும், Pramanya Strategy நிறுவனர் ஹரி கசுலாவுக்கும் இடையே ஆழமான தொடர்புகள் உள்ளன.
Vote Vibe நிறுவனத்துடன் தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்காக கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த Pramanya Strategy நிறுவனம் தான் தற்போது தேர்தல் பணிக்காக அதிமுகவிற்கு வியூக வகுப்பாளராக வேலை செய்து வருகிறது.


ஒரு அரசியல் கட்சிக்கு வியூக வகுப்பாளராக இருக்கும் நிறுவனம், தேர்தல் கருத்துக்கணிப்பு என்பதிலும் வேலை செய்தால் அந்த முடிவுகள் எப்படி பாரபட்சமற்ற தகவல்களை வழங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்படி ஒரே நிறுவனம் அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக ஒரு புறமும், இன்னொரு பக்கம் கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனமாகவும் இரண்டு முகங்களை வைத்துக் கொண்டு செயல்படுவது தேர்தல் கருத்துக்கணிப்பு என்பதன் மீதான நம்பகத்தன்மைக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.




மேலும் இத்தகைய கருத்துக்கணிப்புகள் தேர்தல் நேரத்தில் மக்களிடையே ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்காக நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க