யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
22. 1. 2024 ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதியதாக அறிமுகம் ஆகி உள்ள 500 ரூபாய் நோட்டு ஜெய்ஹிந்த்
Facebook link

Facebook link
விரிவான விளக்கம்
ஜனவரி 22ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டில் ராமர் படம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அப்படத்தினை இந்து மக்கள் கட்சியும் தங்களது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய ரூபாய் நோட்டு குறித்த முக்கிய வார்த்தைகள் கொண்டு இணையத்தில் தேடியதில், அதே வரிசை எண் கொண்ட 500 ரூபாய் நோட்டு ‘Discount Walas’ என்னும் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போலி ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண்பது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட மாதிரி படத்தில், ராமர் படத்துடன் இருக்கும் ரூபாய் நோட்டில் உள்ள அதே வரிசை எண் உள்ளது. ஆனால், அதில் ராமர் படம் இல்லை. மகாத்மா காந்தியின் படமே உள்ளது.
மேற்கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது ஒன்றிய அரசு புதிய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டதா எனத் தேடினோம். அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் பரவக் கூடிய ரூபாய் நோட்டில் இடது பக்கம் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு 2016 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Discount Walas கட்டுரையில் உள்ள மாதிரி படத்திலும் இதே ஆண்டுதான் உள்ளது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் இருந்து புதிய ரூபாய் நோட்டில் ராமர் படம் இருப்பதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ராமர் படத்துடன் புதிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியோ, ஒன்றிய அரசோ அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிகிறது.
எதிர்பார்ப்புகளுடன்...
Jai Shree Ram. pic.twitter.com/BqG7orwlLa
— Indu Makkal Katchi (Offl) (@Indumakalktchi) January 18, 2024