YouTurn

‘மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தவரை தாக்கிய ராணுவத்தினர்’ எனப் பரவும் நேபாள வீடியோ!

‘மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தவரை தாக்கிய ராணுவத்தினர்’ எனப் பரவும் நேபாள வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு வங்க மாநில எல்லையில் வங்கதேசத்தவரை BSF வீரர்கள் சுட்டதாகப் பரவும் வீடியோ தவறானது. நேபாள நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை, மேற்கு வங்கம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்தியா -  பங்களாதேஷ் எல்லை மேற்குவங்கத்தில் வேலி அமைக்கும் பணிக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் பன்றி கூட்டத்தில் ஒரு பன்றியை நமது ராணுவத்தினர் சுட்டதும் தலைதெறிக்க ஓடிய பன்றிகள் கூட்டம். இது போன்ற நடவடிக்கை இந்தியா முழுவதும் தொடர வேண்டும். 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

மேற்கு வங்க முதல்வராக பா.ஜ.க, வை சேர்ந்த சுவேந்து அதிகாரி கடந்த மாதம் (மே 2026) பதவியேற்றார். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. 


இந்நிலையில் அவர் பதவியேற்றதும், மேற்குவங்கத்தில் இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட வங்கதேசத்தவரை BSF வீரர்கள் சுட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


நேபாள ஊடகமான ATV News-ன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பிப்ரவரி 11, 2026 அன்றே பதிவிடப்பட்டிருந்தது. அப்பதிவில் தேர்தல் முன்னேற்பாடுகள் காரணமாக ராணுவ வீரர்கள் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடும் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, நேபாளத்தின் தனஹூ மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், பிப்ரவரி 21 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு கூட்டுப்பயிற்சி நடந்ததாகக் கூறி, பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளுடன் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன. 



இதன் மூலம் நேபாளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, மேற்கு வங்க மாநில எல்லையில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது. இதற்கு முன்பும் இதே போன்று பல செய்திகள் தவறாகப் பரவின. அப்போதே நம் பக்கத்தில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். 


மேலும் படிக்க: மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு தங்ககியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?


முடிவு: 


நம் தேடலில், மேற்கு வங்க மாநில எல்லையில் வங்கதேசத்தவரை BSF வீரர்கள் சுட்டதாகப் பரவும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க