YouTurn

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் பொய்

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் பொய்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இது யார் வீட்டு கொலு தெரியுமா?? The fellow who said will eradicate sanatana dharma U.Stalin, (TN- CM's house).... In their House watching "FLOURISHING SANATANA DHARMA"... அவ அம்மா வெச்ச கொலு!!



X link | Archive link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். 

https://x.com/i/web/status/1842852393844707756



உண்மை என்ன ?


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு உள்ளிட்டோருடன் தொடங்கி வைத்ததாகக் கூறி mylaporetimes வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது. இச்செய்தியானது அக்டோபர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது.


image.png


மேலும் தேடுகையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மயிலாப்பூரில் நடந்த இந்த கொலு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அக்டோபர் 15, 2023 அன்று பதிவிட்டிருந்தை காணமுடிந்தது. 


அப்பதிவில் வைரலாகும் படமும் இடம்பெற்றிருந்தது.


https://x.com/i/web/status/1713604431814762709

இவற்றிலிருந்து மு.க ஸ்டாலின் வீட்டில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடியதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை அறியமுடிகிறது.


முடிவு:


நம் தேடலில், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாகப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. இப்புகைப்படம் கடந்த வருடம் சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவில் எடுக்கப்பட்டது என்பதே உண்மையான தகவல்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க