YouTurn

சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சந்திராயன் 3 வெற்றிக்காக நேர்ச்சை. சந்திராயன் 3 வெற்றிக்காக ஃப்ரான்ஸ் பயணம் முழுவதும் பிரதமர் மோடி நேர்ச்சை. உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்குகள் சேர்க்காத உணவுகள் உட்கொண்டு விரதம் இருப்பதாகத் தகவல்

modi_france_youturn

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். 

பிரதமர் மோடி பிரான்சில் இருக்கும் இந்நேரத்தில், ரூ.615 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. மேலும் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

modi_france_youturn

Archive link

இந்நிலையில் சந்திரயான்-3 வெற்றிக்காக மோடி தனது பிரான்ஸ் பயணம் முழுவதும் விரதம் இருப்பதாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்குகள் சேர்க்காத உணவுகள் உட்கொண்டு விரதம் இருப்பதாகத் தகவல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டினை மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரண்டு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 



Archive link

உண்மை என்ன ? 

பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து வேறு ஏதேனும் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 

பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டில் ‘13 ஜூலை 2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் தந்தி டிவி சமூக வலைத்தளங்களில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்படி எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை.



Archive link

ஆனால், ‘பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி’ என்ற தலைப்பில் நியூஸ் கார்டினை தந்தி டிவி அத்தேதியில் பதிவிட்டுள்ளது. அதில், ‘பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் 3 நாட்கள் பயணம். பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார்’ என்று உள்ளது.



இதில் இருந்து பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறார் எனப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : எகிப்தில் இஸ்லாமியர்கள் அணியக்கூடிய தொப்பியை பிரதமர் மோடி அணிந்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

இதற்கு முன்னர் பிரதமர் மோடி குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி கேமராவை பார்க்காமல் பாடகி ரிஹானாவைப் பார்ப்பதாகப் பரவும் ஃபோட்டோஷாப் படம் !

முடிவு : 

நம் தேடலில், சந்திரயான்-3  திட்டம் வெற்றி பெற வேண்டுமெனப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையானது அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…